தொடர்ந்து பெண் பிள்ளைகளுக்கு தைப்பூசத் தினத்தன்று அல்லது ஒற்றை எண் வரும் மாதங்களில் காது குத்தும் நிகழ்வு நடைபெறும். இச்சடங்கானது உணர முடியாத உண்மைகளைக் கூறுகின்றது. தமிழர் கலாசாரத்தில் பெண்ணுக்கு அழகு சேர்ப்பதாயும், காதுச்சோணை, நரம்பு முடிச்சுக்களில் துளையிடப்படுவதால் அக்குப்பஞ்சர் முறையில் நோய்கள் தடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டது. காதுகுத்துதல், மூக்குத்தி குத்துதல் என்பன நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் என்னும் கருத்து இன்றும் கிராமிய மக்களிடையே காணப்படுகின்றது.