இம்மரணச் சடங்குகள் முடிந்து எட்டாம் நாள் எட்டுச்செலவு செய்யப்படுகின்றது. இச்சடங்கில் இறந்தவரின் ஆத்மா சாந்திக்காக அவர் விரும்பிப் பயன்படுத்தி பொருள்கள். அவருக்கு விருப்பமான உணவுவகைள் அனைத்தையும் படைத்து இறந்தவரின் பெயர் சொல்லி அழைத்து அவரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவர். 31 ஆம் நாள் அந்தியேட்டிக் கிரியைகளும் நடைபெறுகின்றன. இதேவேளை அகாலமரணம் அடைந்தவர்களுக்கு 6 மாதத்தின் பின்பு தான் இவ் அந்தியேட்டிக் கிரியைகள் செய்யப்படுகின்றன. இவை தவிர ஒவ்வொரு மாதமும் இறந்தோர்களது தினத்தை மாசிகம்| என்ற பெயரில் நினைவு கூர்ந்து ஆண்டு திதிக்கு செய்வது போல சிலர் செய்கின்றனர். பலர் வருடாவருடம் ~சிரார்த்தம்| என்று மேற்கொள்கின்றனர். இதில் 31 ஆம் நாள் நடைபெறும் அந்தியேட்டிக் கிரியை நிகழ்விற்கு இன்று அழைப்பிதழ்கள் அடித்துக் கொடுக்கும் வழக்கமும் ஏற்பட்டுள்ளது