1947-10-19 ஆம் நாள் தெல்லிப்பளை – குரும்பசிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இரசாயனவியல் கற்பிக்கும் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கியவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். மும்மொழிப் புலமையுடைய இவர் சிறந்த பேச்சாளர். தமிழ்மொழி மூலம் பல இரசாயன நூல்களை வெளியிட்டவர். மெய்ஞ்ஞானம்,கலை இலக்கியம், ஆகியவற்றிலும் ஆற்றலுடைய இவர் சிறந்த பாடகர். இரசாயனவியல் துறையில் சேதன இரசாயனம், அசேதன இரசாயனம், பொது இரசாயனம், பௌதிக இரசாயனம் போன்ற பல நூல்களை வெளியிட்டவர். சேதன இரசாயனம் கற்பிப்பதில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலர் இன்று வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் இன்னும் பலதுறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2002-01-01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.