1911.10.13 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து கோப்பாயில் வாழ்ந்தவர்.இவரது தந்தையார் குமாரசாமி அவர்கள் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். அவரிடம் தமிழ்ப் பாண்டித்தியத் தினையும் சட்டநெறிமுறைகளையும் பயின்று சிறந்த சட்டவல்லுநராகவும், தமிழ் அறிஞராக வும் திகழ்ந்தார். தந்தை செல்வநாயகம் அவர்களின் முயற்சியினால் அரசியலில் பிரவேசம் செய்தார். இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது பொதுத்தேர்தலில் கோப்பாய் தொகு தியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியின் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர் தம்பியப்பா அவர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக ஊர்வலமாக அழைத்து வந்த வேளையில் புத்தூரில் மாரடைப்பினால் மரணமடைந்தார். இந்நிலையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் ஜூனியர் அப்புக்காத்தாக பணிபுரிந்து மிகுந்த மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த இவரை கோப்பாய் தொகுதி வேட்பாளராக எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் நியமித்தார். அன்றிலிருந்து மரணிக்கும்வரை பாராளுமன்ற உறுப்பினராக வாழ்ந்து தன்னாலான பல தமிழ்ப் பணிகளையாற்றியவர்.இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த இவர் 1949 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட இந்திய-பாகிஸ்தானியர் சட்டம் நிறைவேற்றப்பட்டதனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தந்தை செல்வநாயகம் அவர்களுடன் இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியினை ஸ்தாபித்து அதில் இணைந்து செயற்படலானார்.தமிழ் பேசும் இனத்தின் முக்கிய தூணாக விளங்கிய இவர் அரசியல்ஞானி. தமிழ் அறிஞர். சட்டமேதை. தீண்டாமை ஒழியப் போராடிய ஏழைப்பங்காளன். 1959.10.17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.