Monday, February 17

முத்துக்குமாரசுவாமிகள், ஆறுமுகம்

0

1897 ஆம் ஆண்டு நயினாதீவு என்ற இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கவிதை பாடுந்திறனு டைய சுவாமிகள் தமது குடும்ப வறுமை காரணமாக கல்வியினை இடைநிறுத்தி கொழும்பு பொரளையில் சுருட்டு வியாபாரம் மேற்கொண்ட சகோதரனது கடையில் பணியாளராகச் சேர்க்கப்பட்டார். 1915 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிங்களவர் – முஸ்லிம்களிடையேயான கலவரத்தினால் பலர் இறந்தனர். இக்கொடுமைகளைக் கண்ணுற்ற இவர் உலக மக்களுக்கான நல்வழி ஆன்மீக மார்க்கமே என நினைத்து இறையருளை நாடினார். இதற்கேற்ற வகையில் இந்தியாவிலிருந்து வந்த சமயப்பெரியார் ஒருவர் இவரை அழைத்துக்கொண்டு கதிர்காமம் செல்லும் வழியில் தீட்சையும் உபதேசமும் வழங்கியருளினார். இதன்பின்னர் சமயப்பெரியார் இந்தியா சென்றுவிடவே அவரைத் தேடி இந்தியா சென்று அவரைக்கண்டு தரிசனம் செய்து 1933 ஆம் ஆண்டிலே தனது 36 ஆவது வயதிலே காவியுடையுடன் நீண்ட சடாமுடியுடனும் ஒப்பற்ற தவசீலராக அன்னை நாகபூ~னி அம்மனின் பாதாரவிந்தங்களில் சரண்புகுந்தார். அன்று முதல் நாகபூ~னி அம்மனின் திருவிழாவின் போது பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை செவ்வனே நடத்தி வந்தார். இப்பணியானது ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி இன்றும் செயற்பட்ட வண்ணமிருப்பதற்கு சுவாமிகளே வித்திட்டவராவார். 1949.01.26 ஆம் நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் சுவாமிகள் முத்தியடைந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!