1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நயினாதீவு என்னுமிடத்தில் ஆறுமுகம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். சுனல் சுவாமிகள் என அழைக்கப்படுகின்ற இவர் நயினாதீவுச் சுவாமிகளான முத்துக்குமார சுவாமிகளின் உடன்பிறந்த சகோதரனாவார். திருமண பந்தத்தில் இணைந்திருந்த இவர் பிற்காலத்தில் தனது சகோதரரான முத்துக்குமார சுவாமிகளின் வழியில் ஆன்மீகத்தில் நாட்டம்கொண்டு தன்னை இறைவழியில் வழிநடத்திச் சென்றார். இவர் முருக பக்தனாக இருந்தமையால் நயினாதீவில் காட்டுமலைக் கந்தசுவாமி ஆலயத்தினை உருவாக்கி அங்கு ஆன்மீக வழிநடத்தலையும் ஆன்மீகத்தேடல்களிலும் ஈடுபட்டிருந்தார். 1965 மாசி மாதத்து பிரதமை திதியில் சமாதியடைந்தார். ஆயினும் உடல் சமாதி அமைத்து வைக்கப்படாது அக்கினியில் சங்கமமாக்கப்பட்டது.