அறிமுகம்
இந்து சமுத்திரத்தின் நித்திலம் என அழைக்கப்படும் இலங்கைத்தீவின் சிகரம் எனத் திகழும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குத் திசையில் யாழ் நகரத்திலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்த தொன்மைச் சிறப்புமிகு காரைதீவு என அழைக்கப்பட்ட காரைநகர் முற்காலத்தில் நான்கு புறமும் கடலாற் சூழப்பட்டிருந்தது. காரைச் செடிகள் அதிகமாகவும் நான்கு பறுமும் கடலாற் சூழப்பட்டிருந்ததனாலும் காரைதீவு எனச் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட இப் பிரதேசம் 1869 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரச அதிபதியாகவிருந்த சேர் வில்லியம் துவைனம் அவர்களால் தெப்ப பயணத்துடன் இணைக்கப்பட்ட காரைதீவு கல்லுப்போட்ட வீதியாக மாற்றப்பட்டு யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டு தரைமார்க்கமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் இடம் இருப்பதனாலும், கல்லுப்போட்ட வீதியாக மாற்றப்பட்டதனாலும் காரைதீவு 1923 ஆம் ஆண்டு முதல் காரைநகர் என அழைக்கப்பட்டு வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் செப்புகின்றன. குடல் வளமும் ஆன் மீகச் செழுமையும் நிறைந்த இம் மண்ணில் இயல்பாகவே வர்த்தக நடவடிக்கைகள் செழிப் புற்றிருந்தன. இத்தகைய செழிப்பும் வளமும் கொண்டிருந்த காரைநகர் வாரிவளவு பகுதியில் விவசாயத்திலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்த இராமு சண்முகம் பேரம்பலம் மாணிக்கம் தம்பதியினரின் நான்காவது புதல்வனாக நாகரத்தினம் 1956-01-01 ஆம் நாள் பிந்தார்.
தனது ஆரம்பக் கல்வியினை அப்போது கோவிந்தன் பாடசாலை என அழைக்கப்பட்ட காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையில் தரம் மூன்று வகுப்பு வரை கற்று தந்தையின் தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயத்தில் கல்வியின் தொடர்ச்சிக்காகச் சேர்க்கப்பட்டார். இப்பாடசாலை ஆசிரியர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாணவனாக நாகரத்தினம் காணப்பட்டார். அங்கு ஏழாம் வகுப்பு வரை கற்ற இவர் தனது பன்னிரண்டாவது வயதில் அபார துணிச்சலுடன் தந்தையின் வர்த்தகத்துறையில் கால் பதித்தார். தந்தையின் வியாபாரத் தொழிலுக்கு தோள்கொடுத்துதவினார். ஒரு மனிதனை புத்தகக் கல்வியை விட அனுபவக்கல்வி சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு வழிநடத்தும் என்று மகாத்மா காந்தியடிகளும் உலகம் போற்றும் உத்தம விஞ்ஞானி அப்துல் கலாமும் கூறிய வாக்கிற்கிணங்க நாகரத்தினம் அவர்கள் புத்தகக் கல்வியுடன் அனுபவக் கல்வியினையும் பெற்றதனால் இன்று மேன்மையான அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம், விழுமியம், ஏழைகளை வாழ வைக்கும் கௌரவமுடைய தொழில் அதிபராக தர்மத்தின் வழி நிற்கும் உத்தம வர்த்தகராக உலகம் போற்றும் தொழில் அதிபராக மேன்மையுறு மனிதராக ஹயமுகன் ஹாட்வெயார் என்னும் வியாபார நிறுவனத்தினூடாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்றார்.
தொழில் முயற்சியில் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்கள்.
தனது பன்னரன்டாவது வயதில் துணிச்சலுடன் கல்வியை இடைநிறுத்திவிட்டு தந்தையின் மளிகைக்கடைக்குச் சென்ற நாகரத்தினம் முதலாளியின் மகன்தானே என நினைத்து மெத்தையில், கதிரையில் இருந்திருக்கலாம். ஆனால் தந்தையார் பேரம்பலம் அவர்கள் அவ்வாறு செய்யாது ‘முயற்சியே உன் உயர்ச்சிக்கு வழி எனக் கற்றுக் காள்’ என உரத்த அறிவுரை கூறி அனுபவக் கல்வியை ஆரம்பித்து வைத்தார். இதனை மனதிருத்திய நாகரத்தினம் அவர்கள் தந்தையின் வியாபார நிலையத்திற்கு வருகின்ற பழைய போத்தல்களை கழுவிக் காய வைத்து அவற்றில் பரல்களில் வரும் நல்லெண்ணெய்யினை நிரப்பி அடைத்து பன்னிரண்டு போத்தல்கள் அடுக்கக்கூடிய Horlicks பெட்டிகளில் அடுக்குவதும் அதனை தோழில் சமந்து சென்று ஏனைய கடைக்காரர்களுக்கு விற்பதும் இவரது முதல் அனுபவம். வுpயாபாரத்ததையும் அதன் வரவு செலவுகளையும் அதன் கஸ்ட நுணுக்கங்களை யும் கற்றுக் கொள்ளும் அரம்பக் கல்வியாக அதனை விருப்புடன் ஏற்றப் பல ஆண்டுகள் செய்து வந்தார். இத்துணை அனுபவமும் சுமையும் நிறைந்த தனது ஆரம்ப கால வாழ்வினை இன்றைய இளைஞர்களுக்காக மனந்திறந்து பகிரங்கப்படுத்துவதில் மனநிறைவு கொள்ளும் நாகரத்தினம் அவர்கள் ஒரு வரலாற்று நாயகனாகத் திகழ்கின்றார்.
இவரது தந்தையாரது மளிகைக்கடையில் யாழ்ப்பாண உற்பத்திப் பொருள்களை கொழும்பிற்குக் கொண்டு செல்ல வரும் கொழும்பு முஸ்லிம் வியாபாரிகள் சிறுவனாக இருந்து நல்லெண்ணெய் வியாபராத்தில் சிரமப்படும் நாகரத்தினம் அவர்களை அவதானித்து அவருக்கு ஏற்ற தொழில் முயற்சிக்கான வழிகாட்டலை யும் அறிவூட்டலையும் கருத்தையும் எடுத்துக் கூறினர். துந்தையின் கடையில் நின்று தொழில் பழகும் நாகரத்தினம் அவர்களது எதிர்காலத் தொழில் விருத்திக் கும் உயர்வுக்கும் பலசரக்கு வியாபாரத்தைவிட துவிச்சக்கர வண்டிகளையும் அதன் உதிரிப்பாகங் களையும் விற்பனை செய்யுமாறும் அதற்கு தாங்கள் உதவிகளைச் செய்வதாகவும் கூறினர். மற்றவர்களது கருத்திற்கு மதிப்பளித்து வாழும் இவர் அதற்கு முயற்சிப்பதாகக் கூறி தந்தையாரிடம் முஸ்லிம் வியாபாரிகளது ஆலோசiனையைத் தெரிவித்து அனுமதி பெற்று துவிச்சக்கர வண்டிகளையும் உதிரிப்பாகங்களையும் விற்பனை செய்வதனை சிறிய அளவில் ஆரம்பித்தார். விளையும் பயிரை முளையிற் தெரியும் என்பதற்கிணங்க தந்தையார் இவரது தொழில் நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அளித்து வந்தமையானது இவர் மிகப்பெரும் வர்த்தகராக மாற்றமுறுவதற்கு காலாய் அமைந்தது.
ஆரம்பத்தில் HERO,ASIA ஆகிய துவிச்சக்கர வண்டிகளை விற்பனை செய்யலா னார்.Hero சைக்கிள் 750ரூபாவிற்கும், Asia சைக்கிள் 975 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒருநாளைக்கு குறைந்ததது பத்து துவிச்சக்கர வண்டிகளாவது விற்பனை செய்யப்படவேண்டும். இல்லையேல் தொழிலில் நட்டமடையும் சந்தர்ப்பம் உருவாகலாம். ஒரு துவிச்சக்கர வண்டி விற்பனை செய்தால் 50 ரூபா மட்டுமே லாபமாகக் கிடைக்கும். இவ் 50 ரூபா லாபத்துடன் திருப்திகரமாக நிலைத்து நின்றுழைத்து இன்றைய நிலைக்கு உயர்ந்த வரலாற்றுக்குரியவர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்கள். தந்தையரின் வியாபார விருத்தியில் தனது சகோதரன் ஈ.எஸ்.பி.கணேசலிங்கம் அவர்கள் தன்னைப் போன்று முன்னேறியதை யும் சிறப்பாக அனைவரையும் வாழ வைத்ததனையும் பெருமையோடு நினைவு கூரும் நாகரத்தினம் அவர்கள் தந்தையாரின் அனைத்து வியாபரா நிலையங் களையும் நற்பெயரையும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பு மாநகரிலும் கட்டிக் காத்த பெருமைக்குரியவர் என நன்றி பாராட்டும் பண்பாளன். தந்தையாரின் மளிகைக்கடையில் பதின்மூன்று வருடங்கள் சிறப்பான முறையில் வியாபார நுணுக்கங்களைக் கற்றதோடமையாது சமூகத்தோடியைந்து வாழும் நற்பண் பினையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டார். இதுவே அவர் பின்னாளில் சமூகப்பணிகளில் ஈடுபடும் பண்பை வலுப்படுத்தியதெனலாம்.
குhரைநகரில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தையின் வர்த்தக நிலையத்திற்கு கால்நடையாகச் சென்ற சந்தர்ப்பங்களை என்றும் வாழ்வில் மறவாது நினைத்துப் பார்க்கும் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்கள் தனது பன்னிரண்டாவது வயதில் புத்தகப்பையை கீழே வைத்து நேர்மை, சத்தியம், அறநெறி என்னும் ஆழ்மனப் பதிவுடன் வர்த்தகத்துறைக்குள் காலடி வைத்த அந்த நாள் அவரால் என்றும் மறக்க முடியாத நாளாகும்.
துந்தையாரின் சொல், வழிகாட்டல்களை மீறி நடக்காத இவர் தந்தையாரிடம் பெற்ற வழிகாட்டுதல்களோடு தாயார் மாணிக்கம் அம்மையாரின் தலை தடவல்களுடனான அறிவுரைகள் அனைத்தையும் ஏற்று நெறிமுறை தவறாத வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றார்.
தந்தையாரின் மளிகைக் கடையில் பகுதியாகச் சிறிதளவில் செய்து வந்த துவிச்சக்கர வண்டி விற்பனையை முழு அளவில் செய்யலாம் என எண்ணி 1980 ஆம் ஆண்டின் பின்னர் துவிச்சக்கர வண்டிகளை முழுமையாக விற்பனை செய்ய ஆரம்பித்தார். 1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ‘ஹயமுகன் ஹாட்வெயார்’ நாகரத்தினம் அவர்கள் காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் பாதாரவிந்தங்களைப் பணிந்து ஆரம்பித்தார். 1999ஆம் ஆண்டு தனத்து ஆரம்பிக்கப்பட்ட வியாபார நடவடிக்கையானது வாடிக்கையாளர்களின் உறுதியான நம்பிக்கையாலும் கடமையாற்றும் நம்பிக்கையான ஊழியர்களது அர்ப்பணப்பாலும் சேவையாலும் பல்கிப் பெருகியது. இதன் பின்னர் S.P.N. மோட்டோஸ் என்ற நிறுவனத்தையும் E.S.P.நாகரத்தினம் அன்கோ என்ற நிறுவனத் தினையும் ஆரம்பித்து வாடிக்கையாளர் சேவையை உயர்தரத்தில் வழங்கியமை மென்மனச் செம்மலின் இன்றைய வளர்ச்சியின் முக்கிய கட்டமெனலாம்.
துந்தையாரின் விருப்பப்படி இருபத்தைந்தாவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்து இல்லற மாம் நல்லறத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார். காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் தம்பதியினரின் மகள் தங்கமலர் என்பவரை வாழ்க்கைத்தணையாக 1981 ஆம் ஆண்டு கரம்பற்றினார். அன்றும் இன்றும் ஒரே பண்புகளுடன் தம்பதிகள் இருவரும் ஊராரை நேசித்தலும், தானதர்மங்களை செய்வதும், ஏழைஎழியவர்களுக்கு உதவுவது என்னும் உயரிய குணாம்சங்களுடன் வாழ்ந்து வருவது ‘உயர்குடிப்பிறந்தோர் மாட்டு’ என்ற கூற்றிற்கிலக்கணமாகினர். காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் அருளால் ஐந்து ஆண் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றதோடு மட்டுமல்லாது அவர்களையும் கல்வியில் உயரவைத்து நற்பண்புகளோடு வாழும் மாந்தர்களாக வளர்த்திருப் பதும் நாகரத்தினம் அவர்களது உயரிய குணாம்சத்தை எடுத்துக் காட்டுகின்றது.
தன் உயர்ச்சிக்கு வழிகோலியோரை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் மாண்பினர்.
ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்களது வாழ்வின் முன்னோக்கிய பயணமானது பலரது ஊக்கத்தாலும், ஆலோசனைகளாலும் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்னும் தாரக மந்திரத்தினை மனதிருத்தி வர்த்தகத்தில் விருத்தி கண்டவர். தன் வாழ்வில் மறக்கமுடியாதவர்களாக பலரைக் குறிப்பிட்டு அவர்களை நன்றியோடு நினைவ கூர்ந்து வாழும் ஈ.எஸ்.பி அவர்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமானவர்.
- ஈ.எஸ்.பி மளிகைக் கடையிலிருந்து ஹாட்வெயார் வியாபாரத்திற்கு திசை திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்கிய இஸ்லாமிய நண்பர்கள் என்றும் மறக்கமுடியாதவர்கள்.
- கொரும்பில் பொருள்களை கொள்வனவு செய்து அதனை லொறிகளில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு வரும் வரை களஞ்சியப்படுத்தவேண்டியிருந்தது. இக்களஞ்சிய வசதி எதுவுமற்ற நிலையில் நயினாதீவைச் சேர்ந்த ‘கோபால் றேடிங்’ முதலாளி என்றும் மறக்க முடியாதவர்.
- புhரவூர்திகள் எதுவும் சொந்தமாக வைத்திருக்காத ஈ.எஸ்.பி அவர்கள் தான் வாடகை லொறியில் கொழும்புப் பயணம் செய்யும் போது முறிகண்டிப் பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்தார். இதன் காரணமோ என்னவோ ஈ.எஸ்.பி அவர்கள் தான் சேமித்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாவினைக் கொண்டு எஸ்.வி.எம் அவர்களிடம் முன்பணமாகக் கொடுத்து சொந்தமாக லொறியொன்றை எஸ்.வி.எம் ஐயாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். எஸ்.வி.எம் அவர்கள் பெருமனதோடு வழங்கிய ஆசீர்வாதமும் முறிகண்டிப் பிள்ளையாரின் அருட்காடாட்சமும் காலப்போக்கில் முப்பது லொறிகளுக்குச் சொந்தக்காரர் ஆக்கியதென்றால் அவரின் விடா முயற்சியும் லட்சுமி கடாட்சமும் ஒருங்கே அமைந்ததெனலாம். எஸ்.வி.எம் ஐயாவையும் முறிகண்டியானையும் எப்போதும் மறவாது மனதிருத்தி வாழ்ந்து வருவது மெய்சிலிர்க்கின்றது.
இவ்வாறு நன்றியுணர்வோடு நேர்மையாகவும் திறமையடனும் வர்த்தகத்தில் முன்னோக்கிப் பயணித்த இவருக்கு கொழும்பில் உற்பத்தியில் ஈடபட்டு வரும் தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் யாழ்மாவட்டத்திற் கான ஏக விநியோகஸ்தர் உரிமையைக் கொடுத்தன. இதன் காரணமாக மேலும் முன்னோக்கிய பாதையில் இவரும் இவரடைய வர்த்தகம் வெற்றிநடைபோட ஆரம்பித்தன.
முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற யுத்த சூழலில் யாழ்ப்பாண மக்களுக்கான பொருள்கள் விநியேகத்தில் முக்கிய பங்காற்றினார். இதன்போது கடல் மார்க்கமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு எடுத்துவரப்பட்ட பொருள்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருந்த போதிலும் காப்புறுதி நிறுவனங்கள் கைகொடுத்துதவியதனால் மனச்சோர்வின்றி யாழ்ப்பாண மக்களுக்கான தனது விநியோகப் பணியினை கண்ணியமாகவும் நியாயமாகவும் செவ்வனே நிறைவேற்றியவர்.
பொதுப் பணிகளில் மனநிறைவு காணும் ஈ.எஸ்.பி.நாகரத்தினம்.
வுர்த்தகத்தில் முன்னோக்கிப் பயணித்து வரும் நாகரத்தினம் அவர்கள் தான் ஈட்டும் செல்வத்தினை தனியே தன்னுடன் சேமித்து வைக்காது – தான் மட்டும் செல்வந்தராகி வாழ்ந்தாற் போதும் என நினையாது அறப்பணிகளிலும் பொதுப் பணிகளிலும் ஏழைஎழியவர்களுக்கும் கல்வி முன்னேற்றத்தின் பொருட்டும் செலவிட்டு ஏழையின் சிரிப்பில் மனநிறைவு காண்கின்றார். இவர் ஆற்றிவருகின்ற பொதுப்பணிகளானது சமூக முன்னேற்றப்பணி, கல்விப்பணி, ஆன்மீகப்பணி, என பட்டியலிட்டுக் கூறமுடியும்.
ஒருவன் தான் செய்யும் தொழிலுக்கூடாக ஈட்டுகின்ற செல்வத்தில் ஒரு வீதத்தினையாவது பொதுப்பணிகளுக்குச் செலவிட வேண்டுமென்ற எண்ணம் லட்சம் பேர்களில் ஒருவருக்குத்தான் உருவாகும் என்னும் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம் அந்த லட்சம் பேர்களி ஒருவராக ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்கள் முகிழ்த்தெழுந்தார். கடந்த முப்பது வருடங்களில் பொதுப்பணிகளை சிறிது சிறிதாக ஆரம்பித்த நாகரத்தினம் அவர்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்ற வினாவுக்கு விடைதெரியாதளவிற்கு பொதுப்பணிகளை நிறைவேற்றியிருப் பதும் நிறைவேற்றி வருவதும் உதவி கேட்டு நாடிச் செல்வோரை வெறுங்கையோடு திருப்பி அனுப்பி வைக்காத மனிதநேயப் பண்பாளனாக எம்மத்தியில் நிமிர்ந்து நிற்கின்றார். பொதுப்பணிகளுக்காக அவர் வழங்குகின்ற நிதி தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆராய்வுகள் தொடர்பில் அவர் பின்வரும் மனநிலையில் இருந்து தன் பணியினை நிறைவேற்றுவதனை புரிந்து கொள்ளமுடியும். ‘யார் என்னிடம் உதவி கேட்டு வந்தாலும் அன்றைய தினம் எனது ஒதுக்கீட்டில் உள்ள பங்கீட்டைக் கொடுக்கத் தவற மாட்டேன். சிலவேளை அவர் கேட்ட தொகை அன்று என்னால் கொடுக்க மடியாததாக இருந்தாலும் இயலுமானதை வழங்காமல் விட்டதில்லை. உதவி நாடி வந்தவர் கூறுவது உண்மையா பொய்யா என நான் ஆராய்வதில்லை. இன்னொரவர் சிபார்சினை ஒருபோதம் கேட்டதில்லை. அது மாத்திரமின்றி கேட்கப்பட்ட உதவி, என்ன வேலைத்திட்டத்திற்குக் கேட்டாரோ அந்த வேலைத்திட்டத்திகுப் பயன்படுத்தப்படகின்றதா என்றும் பார்ப்பதில்லை. ஏனெனில் நான் உதவி வழங்கும் போது அவரை நான் வணங்கும் இறைவனாகவே பார்க்கின்றேன். இறைவனுக்கு அளிக்கப்படுவதாகவே எண்ணுகின்றேன். ஆதன் பயன்பாட்டால் வரும் நல்ல பயன்களும், தீய பயன்களும் அவருக்கேயுரியது என்ற நம்பிக்கையுடன் கடந்த முப்பது வருட பொதுப்பணி நிதி உதவிகளைச் செய்து வருகின்றேன். சிலர் கூறுவார்கள் நீங்கள் செய்த உதவியை பிழையாகப் பயன்படுத்துகின்றார்கள் என்று. ஆனால் அவற்றை நான் கேட்டுக்கொள்வதில்லை. அவர் கூறிய விடயங்கள் யாவும் இறைவனுக்குத் தெரியும். ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என நம்புகின்றேன். இதனாலேயே தான் நான் சுகதேகியாகவும் நிம்மதியாகவம் இருப்பதுடன் எனது தொழிலில் சோர்வின்றியும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சந்தோசமாக இருக்கின்றேன்.’ என அவர் திருவாய்மலர்ந்தருளியமை எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.
சமூக முன்னேற்றப்பணி
கடந்த முப்பது வருங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த – வருகின்ற சமூகப் பணிகளை பட்டியலிடுவதென்றால் முடியாத காரியம். இருப்பினும் முக்கியமான சில பணிகளை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படுகின்ற பல்வேறு நூலகங்களுக்கும் பல லட்சம் ரூபா பெறுமதியில் பெறுமதியான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள் ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாதேவ ஆச்சிரமம் மற்றும் சிறுவர் இல்லத்திற்கான வறிய மாணவர் நத்திட்ட உதவிகள்.
யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்திற்கான இளைப்பாறும் மண்டப புனருத்தாரண வேலைகளுக்கான உதவிகள்.
1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வர்த்தகர் சங்கத்தின் பொருளாளராகக் கடமையாற்றிய காலத்தில் இன்றைய வர்த்தகர் சங்கம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கி சேதமுற்றிருந்த அதன் மெல்மாடியை பலலட்சம் ரூபா தனது சொந்த நிதியிலிந்து செலவிட்டு திருத்தி ஏனைய பிரதேச வர்த்தக சங்கங்களுக்கு ஒரு முன்மாதரியாகத் திகழ்ந்தார். குறித்த வர்த்தகர் சங்கக் கட்டடம் இன்று வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருப்பதனால் சங்கம் பெருமளவு வருமான்தை ஈட்டிக்கொண்டிருப்பதற்கு இவரது துணிவும் அயராத முயற்சியும் என்றால் மிகையாகாது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில செயற்பட்டு வருகின்ற நூலகத்திற்கு ஒரு தொகதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்க விருத்திக்கான வசதிகளை ஏற்படுத்தவதற்கான நிதியுதவி வழங்கியமை.
யாழ்ப்பாணம் புற்றுநொய் வைத்தியசாலை அமைப்பதற்காக பதினைந்து பரப்புக் காணியினை தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவ செய்து வழங்கியமை. ஆதனால் இன்று அக்காணியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் பல ஆயிரக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சை பெற்று ஆறுதலடைந்து வாழ்கின்றனர்.
கிராமிய நூல்நிலையங்களின் திருத்தங்கள், புதிய உருவாக்கத்தின் பகுதி வேலைகள் என்பன பல இடங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச செயலகத்திற்கான காணிக் கொடையாளர்கள் நால்வரில் ஈ.எஸ்.பி.நாகரத்தினமும் ஒருவர்.
காரைநகர் கிழவன்காடு கலாமன்றத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான உதவிகளை வழங்கியவர்.
ஆன்மீகப் பணி
ஆன்மீகத்தினை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்கும் நிலையமாக ஆலயங்கள் விளங்குகின்றன. ஆந்த வகையிலே ஆலயங்களின் திருப்பணிகளிலும், அன்னதானப் பணிகளிலும், ஆலயப்புனருத்தாரணப் பணிகளிலும் பங்கெடுத்த இவர் குறிப்பாக காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தின் புனருத்தாரணப் பணிகளையும், காரைநகர் வியாவில் ஐயனார் ஆலய திருப்பணிகளையும், காரைநகர் ஈழத்துச் சிதம்பரத் திருப்பணிச் சபையின் உப பொரளாளராகவும் பணியாற்றிய இவர் மானிபபாய் மருதடி விநாயகப் பெருமானின் புனருத்தாரணப் பணிகளில் பகுதியளவிலும் பங்கெடுத்தார். இவற்றினை விட பல அறநெறிப்பாடசாலைகளின் வளர்ரச்சிக்கான உதவிகளை வழங்கியதுடன் மாணிக்கவாசகர் மடாலய அன்னதானச் சபையின் ஆயட்கால தலைவராக இருந்து கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களது அனுசரனையில் இரண்டு பெரிய மண்டபங்களைக் கட்டுவித்தார். இம் மண்டபத்தின் அன்னதானப் பணி என்றும் குறைவின்றி நடைபெறுவதற்காக பலரது உதவியுடன் ரூபா பத்து மில்லியனுக்குமதிகமான தொகையினைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிட்டு பொருளாளர் பியை செவ்வனே நிறைவேற்றினார்.
கல்விப்பணி
யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலைகளில் பொதப் பரீட்சைப் பெறுபேறுகளின் மீதான சாதனையாளர் கௌரவிப்பிற்காக பல லட்சம் ரூபாவினை வழங்கியதோடு, வலயத்தின் சிறந்த ஆசிரியர் கௌரவிப்பிற்காக தாமாகவே முன்வந்து புத்தகங்களையும் நிதியுதவியினையும் வழங்கினார்.
யுhழ்ப்பாணக் கல்வி வலய விளையாட்டு வீரர்களுக்கான கௌரவிப்புகளை முன்வந்து செயற்படுத்தினார். உதாரணமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரிகளின் துடுப்பாட்டம், ஏனைய விளையாட்டுப் போட்டிகளிற்காக வழங்கிய பண உதவி ஞாலப் பெரிது. ஆனாலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாடசாலைகளது தேவைகளுக்கும் இவரால் உதவிகள் வழங்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுhழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களது பல்வேறு தேவைகளுக்கும் சகலபீடாதிபதிகளின் காலத்திலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கோப்பாய், பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை ஆசிரிய மாணவர்களது பல்வேறு தேவைகளுக்கும் பண உதவிகளை வழங்கி அவர்களது செயற்பாடுகளில் பங்கேற்றவர்.
பொதுப் பரிட்சைகளுக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் கையேடுகள்,துணைநூல்கள் அச்சிடவதற்கும் வெளியிடுவதற்கும் நிதிப்பங்களிப் பினை நல்கியவர்.
பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மருத்துவபீடம் மற்றும் ஏனைய பீடங்களில் கல்வி கற்கும் பல ஏழை மாணவர்களுக்கு உதவி வழங்குபவர் யார் என அவர்களுக்கே தெரியாமல் பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் வழங்கி வருகின்றார். இந்நிதியினை பல்ககை;கழக நிர்வாகம் உரிய சட்ட முறைகளுக்கமைவாக குறித்த மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கல்வி கற்பதற்கு வசதியற்ற ஏழைப்பிள்ளைகள் அவரை நாடிச் சென்று உதவி கேட்கும் சந்தர்ப்பத்தில் வர்களது பாடசாலை அதிபரூடாக ஆரம்ப வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை கற்பதற்கான நிதிஉதவிகளை வழங்கி அவர்களின் முன்னேற்றத்தினை அறிந்து கொள்வதிலும் அவர்களுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதிலும் மனவிருப்புடன் காணப்படுகின்றார்.
யாழ்ப்பாணம் சன்மார்க்க வி;த்தியாலயத்தின் பல ஏழை மாணவர்களை அப்போதைய அதிபர் திரு மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டலோடு ஆரம்ப வகுப்பு முதல் தத்தெடுத்து கல்விக்கான உதவிகளை வழங்கியவர். இத்தகைய மாணவர்களது கல்விப்பெறுபேறுகள் உயர்ந்த நிலையில் காணப்படுவதனை யிட்டு நாகரத்தினம் அவர்கள் பெருமிதடைந்து தான் செய்த உதவிகள் வீண்போகாமல் கல்விக்கான வித்தாகவுள்ளன என்பதில் பெருமையடைகின்றார்.
மேலம் பல பாடசாலைகளின் காணி விஸ்தரிப்பு, பாடசாலைகளின் பகுதித்திருத்த வேலைகள், பாடசாலைகளின் விளையாட்டு முற்றம் அமை;த்தல் என்பன போண்ற பணிகளை செய்து வரும் இவர் முன்பள்ளிக் கல்விக்காக ஆர்வம் கொண்டு பல லட்சம் ரூபாய்களை முன்பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகச் செலிவிட்டுள்ளார். இவ்வாறு உதவிகள் வழங்கிய முன்பள்ளிகளிள் தொகையை பட்டியலிட முடியாதுள்ளது.
மக்கள் போற்றி ஏற்றி வழங்கிய கௌரவங்கள்
‘பொன்மனச் செம்மல் – யாழ்ப்பாணம் சன்மார்க்க ம.வி.கல்விச் சமூகம்.
‘மனித நேய ஈகையாளன்’ – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்.
‘கல்விக்காருண்யன்’ – யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்ல}ரி.
‘கல்விக்கதிரவன்’ – யாழ்பாணம் பண்ணாகம் மெய்கண்டான் ம.வி. கல்விச் சமூகம்.
‘ஈகைக்காவலன்’ – சைவ சமய அருள்மொழி மன்றம்,கேர்பாய்.
‘இறைபணி வேந்தர்’ –
‘சமூகமாமணி’ – பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் மணிவிழாக்குழு.
‘சைவப்புரவலர்’ – அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்.
‘ஈகையார் திலகம்’ – மூளாய் இந்து இளைஞர் மன்றம்.
‘தேசபுத்திர’ – முன்னாள் மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்.
‘சமூகதிலகம்’ – யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலைய ச5கம்.
‘சமூகநலஜோதி’ – வட்டு இந்து வாலிபர் சங்கம்.
அன்பர்களாலும,; பொது அமைப்புகளாலும் அரச நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட கௌரவங்கள் இவரது மிகப்பெரிய தர்மத்தின் வழி தொழில் செய்யும் மனிதருள் மாணிக்கமாக விளங்கியதற்கு வழங்கிய கௌரவமே என்றால் அது மிகையாகாது. அன்புடனும் பண்புடனும் பழகும் இவர் கல்வி, செல்வம், வீரம் அகிய மூன்று கடாட்சங்களையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.
நல்லூர் லயன்ஸ் கழக நீண்டகால உறுப்பினராகவும் 2012 தொடக்கம் 2014 வரை தலைவராகவும் செயற்பட்டுள்ளார். தற்பொழது மாவட்ட லயன்ஸ்சில் ஆறு கழகங்களில் தலைவராக திகழ்கின்றார். லயன்ஸ கழக அழைப்பின் பிரகாரம் கனடாவிற்கு இரு தடவைகளும் அமெரிக்காவிற்கு ஒரு தடவையும் அவரையும் இவரது குழுவினரையும் அழைத்து பெருமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்கவரிற்கு இவருடன் சென்ற எமது யாழ் வர்த்தகக் குழுவினருக்கு கவாத் தீவிலுள்ள அமெரிக்க இராணுவத்தளம் அமைந்த பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் சென்று கௌரவப்படுத்தியமை இவரால் ஆற்றப்பட்ட பணிகளுக்கு கிடைத்த பெரும் பேறூகும்.
இலங்கையில் எந்த ஒரு வர்த்தகருக்கும் கொண்டாடப்படாத மணிவிழாவொன் றினை யாழ்ப்பாணக் கல்விச் சமூகம் வர்த்தக சமூகத்துடன் இணைந்து இவருடைய அறுபதாவது அகவையில் மிகப் பெரிய அளவில் ‘நாகரத்தினமாலை’ என்னும் நூல் வெளியீட்டோடு நடத்தியிருந்தமை இவருடைய நேர்மைக்கும் கல்விப்பணிசார்ந்ததும் பெர்துப்பணி சார்ந்ததுமான கடவுளின் ஆசீர்வாதமே என்று குறிப்பிட்டால் அதனை எவரும் மறுப்பதற்கில்லை.
இன்று எம்மொடு வாழ்ந்து எமக்கெல்லாம் முன்னுதாரணமாக – மக்களை நேசித்து மனிதனாகத் திகழும் யாழ்ப்பாணத்து மிகப்பெரிய வர்த்தக ஆளுமை ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்களது வரலாற்றினையும் பணிகளையும் கௌரவப் படுத்தி இப்பதிவினை பதிவேற்றம் செய்வதில் நாம் அனைவரும் பெருமையடைகின்றோம்.
நன்றி.: நாகரத்தின மாலை – மணிவிழா மலர், 2016. பொன்மனச் செம்மல் பேரம்பலம் நாகரத்தினம் அவர்களின் வாழ்க்கைத் தடம் என்னும் கட்டுரையிலிருந்தும் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்களுடனான நேர்காணல் மூலமும் இக்கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொன்மனச் செம்மல் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் அவர்களின் புதல்வன் திரு ஈ.எஸ்.பி.என்.கமலரூபன் அவர்கள் புகைப்படங்களை வழங்கி உதவினார். அவருக்கும் யாழ்ப்பாணப் பெட்டகம் -நிழலுருக் கலைக்கூடத்தினரின் மனமார்ந்த நன்றி.