300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினையுடைய இவ்வாலயம் ஏறக்குறைய 5 தலைமுறைகளைக் கடந்து இன்றுவரைதிருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து 13 தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். இவ்வாலயத்திலேயே முதன் முதலில் தூக்குக்காவடி எடுப்பதனை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. கந்தன் துரைராசா என்பவர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு சகடைசெய்து அதன் மேல் தூக்குக் காவடியை எடுத்து இம்முறையை ஆரம்பித்து வைத்தார். இலங்கையிலேயே அதிகளவிலான காவடிகள் பவனிவரும் ஆலயமாக இவ்வாலயம் திகழ்வதுடன் காவடிக் கந்தன் என்ற பெயர் பெற்ற ஆலயமாகவும் திகழுகின்றமை குறிப்பிடத்தக்கது.