Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி வி.கனகசபை

0

சித்த வைத்திய கலாநிதி வி.கனகசபை அவர்கள் யாழ்ப்பாணத்தில் 1897ஆம் ஆண்டு பிறந்தவர். நல்லூர் வைமன் வீதியில் வாழ்ந்து வந்த வைத்தியாச்சாரி ச.கந்தசாமி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எம்.கண்ணுச்சாமி ஆகிய இருவரையும் குருவாகக் கொண்டு சித்த வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர் 1940-1960 காலப்பகுதியில் அகில இலங்கை சித்த ஆயள்வேத வைத்திய சங்கத்தின் உப தலைவராகவும் ‘வைத்தியன்’ என்னும் சஞ்சிகையின் ஆரம்பகாலத் தின் முதலாவது ஆசிரியராகவும் இலங்கை ஆயள்வேத சித்த வைத்தியக் கல்லூரியின் சித்தவைத்திய பேராசிரியராகவும் பணியாற்றி 1962ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!