வைத்திய கலாநிதி பண்டிதர் கு.முத்துக்குமாரு அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வளவு என அழைக்கப்படும் இடத்தில் 1878ஆம் ஆண்டு பிறந்தவர். கஸ்தூரியார் வளவு வைத்தியர் வேலுப்பிள்ளை அவர்களை குருசவாகக் கொண்டு சித்தி வைத்தியத் தில் சிறந்து விளங்கியவர். இவர் வைத்தியபூபதி ஏ.சி.இராசையா, வைத்திய கலாநிதி மு.கதிரவேற்பிள்ளை ஆகிய மாணாக்கர்களை உருவாக்கினார். அகில இலங்கை சித்த வைத்திய சங்க ஆரம்ப தலைவராக பொறுப்பேற்று சித்த வைத்தியத்தில் மிகவும் சிறந்து விளங்கிய இவர் 1930ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

