Wednesday, June 24

‘யாழ்வரவு’ வளைவு

0

ஏ9 நெடுஞ்சாலை (கண்டி வீதி) நாவற்குழி வளைவு என்பது யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான அடையாளமாகும். யாழ்ப்பாணத்தை பிற மாவட்டங்களுடன் இணைக்கும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இது விளங்குகிறது. யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாவற்குழி ஊரில் இந்த வளைவு அமைந்துள்ளது. வரவேற்பு வளைவு: இப்பகுதி யாழ் மாவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவின் முடிவிடமாக அமைகிறது.. இந்த வளைவுக்கு அருகில் புகழ்பெற்ற சிவபூமி திருவாசக அரண்மனை அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம்: இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது, போக்குவரத்து பாதைகளில் மிக முக்கிய முனையாக நாவற்குழி சந்தி விளங்கியது.
யாழ்ப்பாணத்தின் வரவேற்பு வளைவு யாழ்ப்பாணத்தில் ஏ9 பாதையில் கண்டி வீதி, செம்மணி பாலத்துக்கு அண்மையில் ‘யாழ்வரவு’ என்ற வரவேற்பு வளைவு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. அது எமது பண்பாட்டுப்; பின்னணி கொண்டு நிறுவப்பட்டுள்ளதுடன் அதன் உச்சியில் யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான ‘யாழ்’ வனப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1970ஆம் ஆண்டு யாழ் மாநகர சபை முதல்வராக இருந்த அமரர் நாகராசா என்பவரால் இந்த வளைவு நிர்மாணிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இந்த வளைவு பல்வேறு சேதங்களுக்கும் உள்ளான நிலையில்; ஏ–9 வீதி அபிவிருத்தி பணியின் போது வீதி அகலிப்புக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த வளைவு இடிக்கப்பட்டு நட்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவையும் வழங்கி புதிய வடிவல் வளைவினை அமைப்பதற்கு அனுமதியும் வழங்கியிருந்தது. இந்நிதியோடு நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபாவினையும் இணைத்து இவ் வளைவு மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளைவில் யாழ்ப்பாணம் என்ற பெயர் அல்லாமல் “யாழ் நகர் வரவு நல்வரவாகுக” என்று தமிழில் எழுதப்பட்டு வளைவு திறந்து வைக்கப்படிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் WELCOME TO JAFFNA என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. மேலும் எமது உயர்வான விழுமியச் செயற்பாடான விருந்தினரை வரவேற்கும் இயல்புக்கமை வாக ‘வருக. யாழ்நகர் வரவு நல்வரவாகுக’ என்ற வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. அத்துடன் அதன் மறு பக்கத்தில் ‘நன்றி மீண்டும் வருக’ என்று எழுதி யாழ்ப்பாண சமூகத்தின் நன்றி- மறவாப் பண்பியல்பை வெளிப்படுத்தி வழியனுப்பி வைக்கின்றமை சிறப்பே.
நல்லூர் பிரதேச சபையினால் மே 20, 2013 ஆம் நாளன்று புதிய வளைவு அப்போதைய நல்லூர் பிரதேச சபைத்தலைவர் வசந்தகுமார் தலைமை யில் திறப்பு விழா நடைபெற்றது. பிரதம அதிதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் கலந்து கொண்டு வளைவினை திறந்துவைத்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!