Sunday, May 10

புதிர்ச்சடங்கு

0

புதிர் என்றால் புதியது என்று பொருள் கொள்கின்றது. புதிது எடுக்கும் நிகழ்வே புதிர் எடுத்தல் எனப்படுகின்றது. இச்சடங்கினை ஒரு கொண்டாட்ட மாகவே சைவ மக்கள் பேணிவந்துள்ளதுடன் இதனை செயற்படுத்துவதற்கு உகந்த நாளாக தெரிவு செய்தது தைமாதத்தின் பூச நட்சத்திரமான முழுமதி தினமாகும். இது முருகனுக்குகந்த தைப்பூச திருநாளாகும். உலகின் நிறைவு அறுவடையிலேயே தங்கி இருக்கின்றது. தைமாதம் உலகம் நீரால் நிறைந்து வளத்தால் மலிந்து விடுகின்றது. அதுமட்டுமன்றி தைப்பூச தினத்திலே ஆட்சி பெற குரு உச்சமடைகின்றான். இக்குரு சந்திர சேர்க்கையிலேயே உலகில் நீரும், நெல்லும் தோன்றியதாக ஆதித்தமிழன் நம்பினான். இதனால் நன்கு முற்றி விளைந்த அறுவடையினை வீட்டிற்குக் கொண்டு வரும் சடங்காக இந்நாளில் புதிர்எடுக்கும் சடங்கைக் கொண்டாடினான். காலநிலையிலும் இயற்கையிலும் காதல்கொண்ட தமிழ்ச் சமூகம் வானிலை அறிவிலும் மிக்குடையதாகி வயலிலே புதிதாக விளைந்த நெல்லைஃதானியத்தை அறுவடை செய்து வீட்டிற்குக் கொண்டு வந்து களஞ்சியப்படுத்தும் சடங்கே புதிரெடுத்தல் சடங்காகியது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!