இலைக்கறிவகைகளில் முருங்கையிலை, அகத்தி, முசுட்டை, முல்லை, மொசுமொசுக்கை, குறிஞ்சா, சிறுகுறிஞ்சா, சண்டி முதலிய வளவு, வேலிகளில் கிடைக்கக் கூடிய இலைக்கறி வகைகள் வாராந்தம் மாற்றி மாற்றி சமைத்து உணவுடன் சேர்த்து உண்டனர். இதனால் நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை வாழ்ந்தனர். உடல் ஆரோக்கியத்திற்கான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கிய இத்தகைய இலைக்கறி வகைகள் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.



