யாழ்ப்பாணத்தின் நுழைவாயில்களில் ஒன்றாகத் திகழும் காரைநகர் வலந்தலை முன் வளைவு காரை நகர் மண்ணுக்குள் நுழையும் ஒவ்வொரு வரையும் வரவேற்கும் கம்பீரமான அடையாளமாக அமைந்துள் ளது. காரைநகரை முதன்மை நிலப்பரப்புடன் இணைக் கும் சுமார் 4கிலோமீட்டர் நீளமான பொன்னாலை கடற்பாலத்தின் முடிவில், காரைநகரின் எல்லையான வலந்தலை சந்திக்கு முன்பாக இந்த நுழைவு வளைவு கம்பீரமாக அமைந்துள்ளது. கடற்பாலத்தைக் கடந்து தீவுக்குள் கால் பதிக்கும் போது, காரைநகர் மண்ணின் பண்பாட்டுப் பிரதிபலிப்பாக இவ் வளைவு அமைந் திருக்கின்றது.
கட்டடக்கலை மற்றும் ஆன்மீக அடையாளம்
நந்தி சின்னம் இந் நுழைவு வளைவின் உச்சியில், சைவ சமயத்தின் முக்கிய அடையாளமும், சிவபெருமானின் வாகனமுமான வெள்ளை நிற நந்திச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காரைநகர் என்பது ஈழத்துச் சிதம்பரம் அல்லது காரைநகர் சிவன் கோவில் மற்றும் திண்ணாபுரம் சிவன் கோவில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களைக் கொண்ட ஒரு ‘சிவபூமி” என்பதை இந் நந்திச் சின்னம் பறைசாற்றுகிறது.
பண்பாட்டு வடிவமைப்பு
பாரம்பரிய தமிழ்-சைவ கட்டிடக்கலை பாணியில் தூண்களுடன், காரைநகரின் பெயரைத் தாங்கி இவ் வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூழல் மற்றும் வாழ்வியல்
இந்த வளைவைக் கடந்து உள்ளே நுழைந்தவுடனேயே காரைநகரின் பிரத்தியேகமான அமைதியான சூழல் தொடங்கிவிடுகிறது. வளைவுக்கு மிக அருகில் பாரம் பரிய சிறிய மீன் சந்தை, பனை மற்றும் தென்னை மரங்கள் சூழ்ந்த கிராமியக் காட்சிகள் மற்றும் இப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து சாதன மான மிதிவண்டிகள் அணிவகுத்து நிற்பதைக் காண முடியும்.
திறப்பு விழா
அமரத்துவமடைந்த முன்னாள் யாழ்;ப்பாணம், கொழும்பு மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பின ரும், முன்னாள் இந்து சமய விவகார அமைச்சரமான மாண்புமிகு தியாகராசா மகேஸ்வரன் அவர்களது காரைநகர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறை வேற்றுமுகமாக முன்னாள் யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவரும், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான மாண்பமிகு விஜயகலா மகேஸ்வரன் அவர்களது பன்முகப்படுத்தப் பட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து அமைக்கப்பட்ட இவ்வளை வானது முன்னாள் அமைச்சரான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களதும், முன்னாள் யாழ் மாநகர ஆணையாளர் திரு இ.த.ஜெயசீலன் அவர்களதும் பங்குபற்றலோடு வீணாகான குருபீட முதல்வர் சந்நிதாச்சாரியார் சிவஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் அவர்களது திருக்கரங்களால் 2018-06-11 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.


