31ஆம் நாள் சடங்கு நிகழ்வில் முக்கியம் பெறும் ஒரு நிகழ்வு தொட்டிலில் போடுதல் ஆகும் . அச்சடங்கில் தாய் மாமனே முதன்மைப்படுகின்றர். மாமன் தொட்டில் கட்டி போடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. அது போல் பரம்பரைத் தொட்டிலில் போடும் மரபும்; காணப்படுகின்றது. பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு என இன்றும் பரம்பரை தொட்டில்களை பேணி வருகின்றனர். தொட்டில் வசதி இல்லாதவர்கள் ஏனை கட்டி அதில் பிள்ளைகளைப் போடும் முறையும் காணப்படு கின்றது. இக் காலத்தில் தொட்டில்கள் நவீன முறமைகளுக்கு ஏற்;ப மாறி வருகின்றன.


