இறைவன் பெண்ணுக்கு சரிபாதி உரிமை வழங்கி அர்த்த நாரியாக காட்சி தருகின்ற சமத்துவத்தின் அறிகுறியாகவே தோரணம் அமைகின்றது. சமச்சீருடன் இருபக்கமும் சமபலம் கொண்டு தோரணம் தொங்குவது போல ஆணும் பெண்ணும் சமனாக மதிக்கப் படல் வேண்டும் என்பதனை உணர்த்தும் தத்துவமே தோரணம் ஆகும். தோரணமானது மங்கல நிகழ்வுகளுக்குரியதாகவும், அமங்கல நிகழ்வுகளுக்குரியதாகவும் விளங்குகின்றன. மங்கல நிகழ்வுகளில் தோரணம் மேல்நோக்கிப் பறக்கும் வகையில் அமைய வேண்டும். தோரணமானது ஈசான, தற்புருஷ, ஆகார, வாமதேவ, சத்யோசாத என்னும் ஐந்து முகங்களை கொண்டவையாக உணரப்பட்டு ஐந்து இறகுகள் கொண்டவையாக தோரணம் அமைக்கப்டல் வேண்டும்;.


