ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொண்ட மணி ஐயர் துறவறம் பூண்டு சமயத்தொண்டு புரிந்து வந்தார். அவர் 1966ஆம் ஆண்டு தொடங்கிய ஆதீனமே நல்லை திருஞனாசம்பந்தர் ஆதீனமாகும். சைவம் வளர கதாப்பிரசங்கம், பஜனை, பண்ணிசை, வகுப்புகளுடன் அன்னதானம் வழங்குதல், சைவசமய நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளித்தல், தீட்சை வழங்குதல் எனப்பல பணிகள் இதன் வழி இன்று வரை தொடர்கின்றன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரசங்கப் பணி சுவாமிநாத தம்பிரான் பணி மூலம் தொடர்ந்த வண்ணமுள்ளது. சைவத்தின் பெருமைபேணுவதற்கும் சைவத்தின் காவலிடமாகவும் ஈழத்தில் அமைந்திருக்கும் ஒரேயொரு சைவசமய ஆதீனம் இதுவொன்றேயாகும்.
