வரலாற்றுப் புகழ்கொண்ட ஈழநல்லுூர்க் கந்தனது தேரடியின்கீழ் பல ஞானிகள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருளாவி வழங்கினர் குறிப்பாக தேரடிச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்றோருக்கு மத்தியில் சடையம்மா என்னும் பெண் சித்தரும் முகிழ்த்தார். சடையம்மா என்னும் பெண் சித்தர் நல்லூரான் தேர்முட்டிக்கு அருகில் அமைந்துள்ள நிலத்தில் மடம் அமைத்து அடியார்களுக்கு அருளாசி மற்றும் அன்னதானப் பணிகளை முன்னெடுத்தார். இமஃமடத்தில் பஜனை, பிரசங்கம், அன்னதானம் வழங்கும் பணிகள் என சிறப்பான பணிகள் இடம்பெ;ற்று வந்தன. காலப் போக்கில் இம்மடத்தின் பெயரை அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்துடன் நடைபெற்று வந்த பணிகளுக்கு மேலாக யோகாசனப் பயிற்சியடன் நல்லூர் உற்சவ காலம் மற்றும் நாயன் மார்களது குருபூசை தினங்களில் மகேசுரபூசை நடத்தி அன்னதானம் வழங்கும் கைங்கரியத்தினை நிறைவேற்றி வருகின்றனர்.