Sunday, November 3

கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை

0

இலங்கை அமெரிக்க மி~னரிமார்களால் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு என்னும் இடத்தில் இலங்கையின் முதலாவது மேலைத்தேய வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆசியாவிலும் இலங்கையிலும் அமைக்கப்பட்ட முதலாவது மருத்துவமனையாக கொள்ளப்படு கின்றது. அதன் தொடர்ச்சியாக ஆங்கில மருத்துவத்தில் மருத்துவர்களை உருவாக்கும் பணியும் ஆரம்பிக்கப் பட்டது. அதன் முன்னோடிச் செயற்பாடாக மானிப்பாயில் ஆங்கில மருத்துவ மனை ஒன்று உருவாக்கப்பட்டது. இவ்வைத்தியசாலையானது மிஷன் வைத்திய சாலை என்றும் சேச் வைத்தியசாலை என்றும் அழைக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு வைத்தியர் சமுவேல் வைத்தியர் கீறீன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்திய சாலையானது அந்நாள்களில் மருத்துவ மாணவர்களை பயிற்று வித்து மருத்துவர்கள் ஆக்குவதில் மிகவும் அக்கறையோடு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் முன்னோடியாகவும் பயிற்றுவிப்பாளராகவும் மருத்துவ ராகவும் தன்னை அர்பணித்துப் பணியாற்றியவர் இலங்கை அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்த மருத்துவர் பிஸ்க் கிறீன் என்பவராவார். அவர் வட மாகணத்தில் வைத்திய நிபுணர்களை அதிளவில் உருவாக்கும் பணியை தனது இலட்சியமாக கொண்டிருந்தார்.  

மருத்துவப் புத்தகங்கள் பற்றாக்குறையாக இருந்த காலத்தில் வைத்தியர் பிஸ்க்கிறீன் ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்களை உருவாக்கியும்; அல்லது வேறு ஆங்கில மருத்துவப் புத்தகங்களிலிருந்தும் தமிழில் மொழிபெயர்த்தும் மாணவர்களுக்கு  மருத்துவத்தை பயிற்றுவித்த தாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் வைத்தியர்கள் பேதாதிருந்தமையால் அவர்களைப் பயிற்றுவிப் பதற்கு மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து வைத்தார். அவ்வாறு வைத்தியர் கிறீன்; அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலையே மானிப்பாய் கிறீன் வைத்தியசாலை எனப் பெயர் கொண்டமைந்து நன்றியுணர்வுடன் அவரது பணிகளையும் அர்ப்பணிப்பினையும் இன்றும் எடுத்துக்காட்டுகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!