Thursday, July 25

சைவத்தமிழ் காவலர் காசிநாதர் சிவபாலன்.

0

சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும்  தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட  தவமைந்தன் சிவபாலன் அவர்கள்  காசிநாதர் சிவகாமிசுந்தரி தம்பதியினரின் மகனாக 1952-03-26ஆம் நாள் பிறந்து இல்லற வாழ்விலிருந்து விலகி தவவாழ்வினை மேற்கொண்டு சைவத்திற்கும் தமிழிற்கும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

நிறைமொழியுடைய இறை இன்ப அனுபவத்தில் மூழ்கித்திழைக்கும் மனிதர்களே மாந்தர் என்னும் சிறப்பினைப் பெறுகின்றனர். கல்வியில் ஈடுபாடுள்ள குடும்ப உறவுகள் நிறைந்த பலர் இவருக்கு உறவினராக இருந்துள்ளனர்.

தனது ஆரம்பக்கல்வியை மட்டுவில் சந்திரமௌலீச வித்தியாலயத்திலும் உயர்கல்வியை  சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும்  கற்றார். படிக்கும் காலத்தி லேயே ஆன்மீகத்தில் நாட்டமுடைய இவர் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின்னர் தனது இளமைக் காலத்தினை அதிஉயர் ஆன்மீக சிந்தனை வெளிப்பாட்டில் பெரிய தந்தையாரான மட்டுவில் முத்துமாரியம்பாள் தர்மகர்த்தா அமரர் இ.தாமோதரம்பிள்ளை அவர்களுடன் துணைநின்று முத்துமாரி அம்பாள் ஈலய வளர்ச்சிக்கு பெரிதும்  முன்னின்றுழைக்கலானார். இதன் வழிப்பேறாக 1978ஆம் ஆண்டு பண்டிதமணி அவர்களால் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த அறிமுகமும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகப்பணிகளுக்காக பிரதம லிகிதர் பதவிக்கு பத்திரிகை ஊடாக கோரப்பட்ட விளம்பரத்திற்கூடாக விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் பங்குகொண்டு பிரதம லிகிதர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து மரணிக்கும் வரை அம்பாளின் பாதாரவிந்தங்களில் சரண்புகுந்து தன்பணியை நன்றியுடனும் இறைவிசுவாசத்துடனும் மேற்கொண்டு வந்தவர்.  

இவருடைய தந்தையார் கந்தர் காசிநாதர் அவர்கள் மட்டுவிலில் அமைந்துள்ள சந்திரமௌலீசுவர வித்தியாசாலை அமைவதற்கு காணி வழங்கி பாடசாலையின் ஸ்தாபகராக இன்றும் நினைவுகூரப்படு கின்றார். இத்தகைய நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற குடும்பப் பின்னணியிலிருந்து தனது வாழ்வினை கட்டமைத்துக்  காண்டார்.

பிரதி ஞாயிறு தோறும் இரவிலும் பகலிலும் பேசாத விரதம் அதாவது மௌனவிரத்தினை தன்வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்ந்தவர். ,வர் தெல்லிப்பளை துர்க்கையம்பாள் ஆலய நிர்வாக பிரதம லிகிதர் பதவிக்கான நுர்முகத்தேர்வு தோற்றிய நாளும் மௌன விரதமிருக்கும் ஞாயிறேயாகும். அக்கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்தவர்.

இன்முகத்துடன் அனைவரையும் வரறே்று பணியாற்றும் ஆளுமையாளரான சிவபாலன்ஐயா அவர்கள் “வெள்ளைக்கலையுடுத்து வெள்ளைப்பணிபுண்டு வெள்ளைக்கமலத்தே வீற்றிருக்கும் என்னம்மை யின் அருள்பெற்றவர். இத்தோற்றப்பொலிவினை அவரது நடத்தையிலும் தோற்றத்திலும் எப்பொழுதும் காணக்கூடியதாகவிருக்கும்.

மட்டுவிலில் உள்ள தனக்குச் சொந்தமான காணியினை பொதுச்சேவை மையங்கள் அமைப்பதற்கு பகிர்ந்தளித்து தனது சமூகப்பற்றினை மேலும் நிலைநிறுத்தியுள்ளார்.

சிவகாமசுந்தரி மான்மியம் என்னும் நூலை ஆக்கியதுடன்  கிராமவலம் புத்தூர், மாவைக் கந்தன் ஆலயம் திருத்தல வரலாறு, நாவலர் பெருமான் வழியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, அனைத்துலக நான்காவது மாநாட்டு கட்டுரைகளின் தொகுப்பு ஆகிய நூல்களின் வெளியீட்டாளராகவும் திகழ்கின்றார்.  இவற்றினைவிட ஈழத்துப் பெரியோர்களது நினைவு நாளில் அவர்களை நினைவுகூரும் வகையில் ஞாபகார்த்தக் கட்டுரைகளை பத்திரிகைகளிலும் மலர்களிலும் எழுதிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சைவத்திற்காகவும் தமிழிற்காகவும் தன்னை அர்ப்பணித்து கலாநிதி அமரர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தெல்லிநகர் துர்க்கையம்பாளின் பக்தனாகவும் அம்பாளின் தொண்டனாகவும் வாழ்ந்து 2019-10-16ஆம் நாள் தெல்லிநகர் துர்க்கையம்பாளின் பாதார விந்தங்களில் சரண்புகுந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!