Tuesday, May 21

கிறிஸ்தவ திருமண சடங்கு

0

கிறிஸ்தவ திருமணம் என்பது ஆதிப் பெற்றோரின் வழித் தோன்றலாகும். ஆதியிலே இறைவன் உலகைப் படைத்து அதனை ஆண்டு வழி நடத்த மனிதனைப் படைத்தார். இவ்வாறாக படைக்கப்பட்ட மனிதனின் முதல் மனிதன் ஆதாம் ஆவார் ஆதாமின் விலா எலும்பின் மூலம் ஏவாள் படைக்கப்பட்டாள் இதன் மூலம் திருமண பந்தம் உருவானது.

இவ்வாறான திருமணத்தின் மூலம் கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஓர் குட்டித் திருச்சபையாக மாறி சந்ததியினரைப் பெருக்க வேண்டும் என்பதே இறைவனின் சித்தம். திருமண வாழ்வு என்பது ஓர் உன்னத அரும் அடையாளமாகும் இதற்கு உடன்படிக்கைகளும் உண்டு.

அதாவது திருமணபந்தத்தில் இணையும் கணவனும் மனைவியும் இறைவன் முன்னிலையிலும் திருச் சமூகத்தின் முன்னிலையிலும் தமது பூரண சம்மதத்தை தெரிவிக்க வேண்டும்.

இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உமக்கு பிரமாணிக்கமய் வாழ்ந்து என் வாழ்நாள் எல்லாம் உம்மை நேசிக்கவும் பதிக்கவும் வாக்குப் பண்ணுகிறேன் எனும் வாக்குறுpயினை கணவனும் மனைவியும் அறிக்கையிட்டு தமது சம்மதத்தை தெரிவிக்க வேண்டும்.

இதுவே உண்மையான கிறிஸ்தவ குடும்பத்திற்கு அத்;திவாரமாக காணப்படுகிறது இதுவே இறைவனும் விரும்புகிறார். எனவே இது ஓர் புனித அரும் அடையாள மாகும். இது கிறிஸ்தவ வாழ்வின் உன்னத அருட்சாதனமாகும்..

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!