1853 ஆம் ஆண்டளவில் புங்குடுதீவு காசிநாதர் என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. இவரது சந்ததியினரே இக்கோயிலைப் பராமரிக்கும் முகாமையாளர் களாகப் பொறுப்பினை வகித்து வருகின்றனர்.இவ்வாலயச் சூழலில் சிவன்கோயிலும், சற்றுத்தள்ளி முத்துமாரி அம்மன் ஆலயமும், தீர்த்தக்குளமும் அமைந்திருப்பது தமிழகத்து தென்மதுரையின் ஆலயச்சூழலை எமக்கு நினைவூட்டுகின்றதனை மனங்கொள்ள வேண்டும். காசியர் கூட்டம் என இக்கோயிலின் முகாமையாளர்களை அழைக்கும் வழக்கம் இன்று வரையும் தொடர்கின்றது. ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.