இவ்வாலயச்சூழலில் அமைந்திருந்த இலுப்பைமரம், புளியமரம் என்னும் பெருவிருட்சங்களின் கீழ் வேலாயுதமும் சூலாயுதமும் அமர்ந்திருந்துள்ளன.இவற்றினை முருகன், வைரவர் தெய்வ வடிவத்தோற்றங் களாகக் கருதி வழிபட்டு வந்தனர்.காலப்போக்கில் முதலியார் விசயரட்ணம், தில்லைநாதர் ஆகிய இருவரும் 1784 ஆம் ஆண்டில் மாத்தனை என்னும் நிலப்பகுதியில் ஆலயத்தினை அமைத்ததாக 1892 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கச்சேரிப் பதிவுகள் கூறுகின்றன.தொடர்ந்து 1950, 1965, 1967, 1984, 1987, 2000 முதலிய ஆண்டுகளில் ஆலயப் புனருத்தாரன வேலைகள் நடைபெற்று, ஆலயம் இன்றைய நிலையினை அடைந்ததெனலாம். ஆரம்பத்தில் அலங்கார உற்சவங்கள் நடைபெற்று 1967 ஆம் ஆண்டு கொடித்தம்பம் நிறுவப்பட்டதன் பின்னர் ஆனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பன்னிரண்டு நாட்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.