ஏறக்குறைய 1830 ஆம் ஆண்டளவில் கிருபாகரன் என்ற திருப்பெயரில் முருகனை அமைத்து வழிபடலாயினர்.கொக்குவில் இந்துக்கல்லூரியின் அருகாமையில் அமைந்திருக்கும் இவ்வாலயம் நினைக்க முடிச்சான் என்ற காணியில் 1786 ஆம் ஆண்டில் கொக்குவில் தோம்பு என்ற பதிவில் தர்மசாதனம் செய்யப்பட்ட வளவில் அமைக்கப்பட்டதாகும்.சண்முகம் முருகேசு என்பவரது அயராத முயற்சியினால் கோயிலின் பிரதான அங்கங்களான கருவறை, விமானம்,அர்த்தமண்டபம், முன்மண்டபம், விநாயகர் சந்நிதி, திருமஞ்சனக்கிணறு, மடைப்பள்ளி, களஞ்சிய அறை ஆகியன கட்டி முடிக்கப்பட்டன. தொடர்ந்து கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் பரிபாலன சபையினர் முயன்று 1998-04-10 ஆம் நாள் புனராவர்த்தன மஹா கும்பாபிN~கம் நடைபெற்றது. நான்கு காலப் பூசைகள் நடைபெற்றுவரும் இவ்வாலயத்தில் நீண்டகாலமாக அலங்கார உற்சவமே நடைபெற்று வந்தது.1927 இல் கோயிலுக்கான கொடித்தம்பம் மற்றும் தேர், யாகசாலை என்பன அமைக்கப்பட்டு மகோற்சவம் நடை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.