Sunday, October 6

கந்தசுவாமி வைரவர் கோயில் – நுணாவில் மத்தி

0

ஏ9 நெடுஞ்சாலையில் சாவகச்சேரி நுணாவில் மத்தியில் அமைந்திருக்கும் இக்கோயிலானது ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வைரவர் கோயில் வடக்கு நோக்கி கிராதியடி வைரவர் என்ற பெயரோடு சிறுகுடிலாக வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு வைத்து வணங்கும் கோயிலாக இருந்து வந்துள்ளது. நுணாவில் கிழக்கு கத்தாப்பு மரத்தடி என்னும் பகுதியில் பரம்பரையாக வாழ்ந்து வந்த அந்தணர் குலத்தவருக்குச் சொந்தமாக இருந்த காணியில் ஊரவர்களும் அந்தணர்களும் இணைந்து வைரவரை வழிபட்டு வந்தனர். சந்தன ஐயர் என்பவர் தனது செலவில் வலது புறம் விநாயகரையும், இடதுபுறம் முருகப்பெருமானையும், நடுவில் வைரவரையும் வைத்து ஒரே அளவில் மூன்று ஆலயங்களாக அமைத்து வழிபட்டனர். சந்தன ஐயர்பரம்பரையில் வழிவந்த ஒருவருக்கு இறைவன் கனவில் தோன்றி தற்பொழுது முருகன் ஆலயம் இருக்குமிடத்தில் ஞானசக்தியாகிய வேலுடன் வயோதிபர் ஒருவர் இருப்பது போன்று காட்சிகொடுத்தார். அதன் பிரகாரம் இவ்விடத்தில் ஓர் முருகனாலயம் அமைக்க எண்ணி மெல்லமெல்லமாக கோயில் அமைக்கப்பட்டது. வடக்கு நோக்கிய வைரவர் சந்நிதானம் அமைந்த சிறப்புபெற்ற இக்கோயிலானது ஒவ்வொரு வருடத்திலும் பங்குனி மாதத்தில் வரும் அத்த நட்சத்திரத் திதியினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!