கொடிகாமத்திற்கும் மீசாலை வடக்கு புத்தூர் சந்திக்கும் இடையில் உள்ள ஏ9 நெடுஞ்சாலையில் இராமாவில் என்னும் இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயமானது இராமபிரான் தனது மனைவியான சீதாப்பிராட்டியைத்தேடி இலங்கைக்கு வந்தவேளையில் ஸ்நானம் செய்வதற்காக தனது வில்லினால் ஆக்கிய புண்ணிய குளத்தினையும் கொண்டமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பெருமானின் கால்பட்ட இடமே இன்று இராமாவில் என்று அழைக்கப்படுகின்றது.300 வருடங்களுக்கு மேலாக சிறுமண்டபத்தில் வேலுடன் இருந்து அருளாட்சி செய்தார். பின்னர் ஊர்மக்களது பங்களிப்போடு திருப்பணிச் சபையினர் முன்னின்றுழைத்து இன்றைய வளர்ச்சி நிலையினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடத்திலும் ஆனி அமாவாசையைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு வருடாந்த மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.