Wednesday, October 9

கந்தசுவாமி கோயில் கற்குளி, நுணாவில் – கிழக்கு, சாவகச்சேரி

0

இவ்வாலயமானது 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்றதாக அறியமுடிகின்றது. இக்கிராமத்தில் வாழ்ந்த முத்து வணிகத்தொழிலில் ஈடுபட்டவரான இளையவர் என அழைக்கப்படும் வல்லிபுரம் இளையதம்பி என்பவர் முத்துக் குளிக்கும்போது பிரகாசமான சங்கு ஒன்று அவருக்குக் கிடைத்தது. அதனை அவர் எடுத்து வந்து தனது வீட்டு வளவினுள் இருந்த பற்றைக்குள் மறைத்து வைத்தார். பாதயாத்திரையில் கதிர்காமம் சென்று வந்த அடியார்கள் சிலர் இக்கிராமத்திலிருந்த பேய்ச்சியம்மன் ஆலயத்தில் ஒன்றுகூடி கந்தபுராணம் படித்தவேளை முருகனை வழிபடுவதற்கு வேல் ஒன்று இல்லையே என்று எண்ணியவேளை இளையதம்பி தான் மறைத்து வைத்திருந்த சங்கினைச் சென்று பார்த்தபோது அவ்விடத்தில் ஒரு வேல் இருப்பதனைக் கண்டார். இவ்வேலை அடியவர்களின் உதவியுடன் பேய்ச்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்து வழிபடலாயினர். இவ்வாலயத்தில் ஆடிமாத பௌர்ணமி தினத்தினை இறுதி நாளாகக்கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!