திருமடந்தை முதலியார் பரம்பரையினால் 1774 ஆம் ஆண்டு கோயிற்காடு என்னும் 40 பரப்புக்காணியில் அமைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டில் அழிவுற்ற இவ்வாலயம் மீண்டும் புனரமைப்பிற்குட்படுத்தப்பட்டு கட்டியெழுப்பப்பட்டு ஆகம விதிப்படி மூலஸ்தானம். அர்த்தமண்டபம், மகாமண்டபம், தம்பமண்டபம், தரிசனமண்டபம், வசந்தமண்டபம், முன்மண்டபங் களுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருக் கின்றது. கருவறை கிழக்கு நோக்கியும், அம்மனின் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்திருக்கின்றது. சிவனுடைய மகோற்சவம் சித்திரைப்பூரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக கொடியேறி பதினெட்டுநாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் அம்மனுடைய மகோற்வம் ஆடிப்பூரணையை தீர்த்த தினமாகக்கொண்டு பத்து நாட்கள் நடைபெறுவதும் வழக்கமாகும். 1980 ஆம் ஆண்டு பொது மக்களின் உதவியோடு அழகிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. யாழ்பல்கலைக்கழக பரமேஸ்வராச் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 300 மீற்றர் தொலைதூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.