Sunday, October 27

வாரிவளவு பிள்ளையார் ஆலயம்

0

இவ் ஆலயத்தில் நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளாக விளங்கும் சதுர்த்தி விரதம், பிள்ளையார் கதை, கஜமுகன் சங்காரம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரைப் புத்தாண்டு தினத்தை இரதோற்சவ நாளாகக் கொண்டு பத்துத் திங்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. பழமையும் பெருமையும் வாய்ந்த வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் காரைநகர் மேற்கு வீதியில் வாரிவளவு எனும் குறிச்சியில்  அமைந்துள்ளது. சுப்புடையார் பரம்பரையினர் 1880 ஆம் ஆண்டு தொட்டு சிறு கோயில் மண்ணால் கட்டி வழிபட்டனர். திரு. த. கணேசபிள்ளை காலத்தில் பெருங் கோயிலாகக் கட்டி மகா கும்பாபிN~கம் நடைபெற்றது. 1972 ஆம் ஆண்டு ஈ.வி. கார்த்திகேசு, ந. கணபதிப்பிள்ளை, சி. சிவஞானம் ஆகிய மூவரைக் கொண்ட குழுவினரிடம் நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சி. சிவஞானம் அவர்கள் இக் கோயிலைப் பரிபாலித்து வருகிறார். இராசகோபுரம் 1982 இல் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூன்று பக்கங்களுக்கும் கோபுரம் அமைக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் மகா கும்பாபிN~கம் நடைபெற்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!