“மாட மாளிகை மண்டபம்
கழனி பள்ளிகள் ஆலயம்
கூட மேவிடும் வீதிகள்
அழகு தந்திடும் அளவை ….” என பண்டிதர் த.சிவலிங்கம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற வலிகாமம் வடக்கு, அளவெட்டியூரில்,
“எழுத்துச் சொல்பொருள் மூன்றா யடக்கிய
பழுத்த இலக்கணத் தொல்காப்பியத்தில்
உரையாசிரியர் இளம்பூரணர், மற்றோ
வரைந்த உரைகளை மேலு மாராய்ந்து
தமிழுலகம் பாராட்ட ஒருநூல் தந்தவ’’ என அளவையூர் முதுபெரும் புலவர், புலவர் மணி வை.க.சிற்றம்பலம் அவர்களாலும் மற்றைய கல்விமான்களாலும் போற்றப்பட்டவர் மூதறிஞர், பண்டிதர் உயர்திரு கனகர் நாகலிங்கம் அவர்கள். சிறப்பான தமிழ்க்கல்விப் பாரம்பரியம் நிலவிய இவ்வூரில் ஒரு நல்விவசாயியின் மகனாக 1920-03-04 பிறந்த நாகலிங்கம் அவர்கள் கல்விபால் பற்றுக்கொண்டு கற்றார். அறிஞர் பெருமக்களும் ஆன்மீகச் செல்வர்களும் நிறைந்த அக்காலக் கல்விக்கூடங்களில் கற்றுத் தேறினார். ஆரம்பக்கல்வியை அளவெட்டி வடக்கு சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்ட பண்டிதரவர்கள் பண்டிதத்திற் குரிய சாமானி;யத் தன்மைக்கு மேம்பட்ட விசே~முடையவர். பரமேஸ்வரா பண்டித ஆசிரியர் கலாசாலையில் பண்டிதக் கல்வியும் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சையில் தோற்றித் திறமைச் சித்தி பெற்றார். 1942ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ் பண்டிதராகவும் பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும் திகழ்ந்த இவர் சிலகாலம் பண்டிதப் பரீட்சைக்குத் தோற்றுவோருக்குக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டார். யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் பாலபண்டித, பண்டித வகுப்புகளுக்குக் கற்பித்தார். மல்லாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பண்டித வகுப்புகளிலும் கற்பித்தார்.
1948ஆம் ஆண்டில் அளவெட்டி தம்பிப்பிள்ளை அவர்களின் அருந்தவப் புதல்வி கற்பிலும் பொற்பிலும் மிக்க இராசம்மா அவர்களை விவாகஞ் செய்து கொண்டார். இவர்களின் இல்;லறப்பேறாக எட்டுப் புத்திரச் செல்வங்களைப் பெற்றார். இவர்களுக்கு ஆறு புத்திரிகளும் இரு புத்திரர்களும் நன்மக்கட்பேறாக வாய்த்தார்கள்.
முத்தென உதித்த மூத்தமகள் தவராணி, அடுத்த பெண்பிள்ளையாக அமையப் பெற்றவர் கலைப்பட்டதாரியாகி ஆசிரியப் பணியாற்றும் உ~hதேவி ஆவார். மூன்றாவது மகவாகத் தோன்றியவரே வேதநாயகன் என்று அழைக்கப்படும் முதலாவது ஆண்பிள்ளை. இவரையடுத்த வரும் ஆண்பிள்ளையாக அமைந்து பண்டிதருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தார். அவரும் ஒரு கலைப்பட்டதாரி.அருணோதயாக் கல்லூரி அதிபராகச் சிறப்பாகக் கடமையாற்றும் திரு. கேதீஸ்வரன் ஆவார்.
பெண்பிள்ளைகள் வரிசையில் மூன்றாவதாகத் தோன்றியவர் மனோகரி என்பார். கலைப் பட்டதாரியாகி ஆசிரியப் பணியாற்றுகின்றார். நான்காவது மகள் திவாகரி என்பார், தென்னாபிரிக்க நாட்டிலே வசித்து வருகிறார். ஐந்தாவது பெண் மகளாகத் தயாநிதி அமைந்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட சிரே~;ட விரிவுரையாளராகத் திகழும் கலாமதி பண்டிதர் பெற்ற ஆறாவது அருமைப்புதல்வியாவார். தனக்கெனப் பிரத்தியேகமான சில கொள்கைகளைக் கைவிடாதவராக, ஒழுக்கநெறி தவறாத பண்பியல்புகளுடன் வாழ்ந்தவ ரான பண்டிதர் தன் புத்திரச் செல்வங்களையும் அவ்விதமாகவே வழிநடத்தியவராக அமைந்திருந்தார். அதன் காரணமாக அறிவாற்றல் இயற்கையாகவே அமையப் பெற்றவர்களாக பிள்ளைகள் அனைவரும் திகழ்ந்ததுடன் சிறப்பான கல்வித் தேர்ச்சிகளைக் கொண்டவர் களாகவும் உயர்ந்துள்ளார்கள். சமூகத்தின் மதிப்புக்கும் கணிப்புக்கும் உரியவர்களாகத் திகழ்கின்றார்கள்.
இவ்வாறு இன்று தமது துறைகளில் அர்ப்பணிப்பான பணிகளை ஆற்றும் இப்பிள்ளைகள் எண்மரும் இக்குடும்பத்தலைவர் பண்டிதர் ஐயா தம்பதியினரின் அன்பிலும் அரவணைப்பிலும் வழிகாட்டுதலிலும் “இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்பதற்கமைய கல்வி கற்றார்கள். ஒவ்வொருவரின் இளமைப்பருவ சாதனைகளையும் சான்றிதழ்களையும் நோக்கும் போது “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” இவ்வையகத்தில் பிள்ளைகள் தம் குடும்பப் பாரம்பரியத்துக்கும் நற்பெயருக்கும் பெருமை சேர்ப்போராக உயர்தல் என்பது இறைவன் நமக்குத் தரும் வரமெனலாம்.
பரமேஸ்வராக் கல்லூரியில் பிரத்தியேகமாக நடைபெற்ற பண்டித ஆசிரியப் பயிற்சிகளில் சேர்ந்து தலை சிறந்த தமிழாசிரியர்களான பண்டிதமணி, க.சு.நவநீதகிருஸ்ணபாரதியார், வித்துவான் க.கார்த் திகேசு முதலானோரிடம் தமிழ், இலக்கண, இலக்கியங்களை ஐயந் திரிபுறக்கற்று தெளிந்து பயிற்றப்பட்ட பண்டித ஆசிரியராக மலர்ந்தவர். அத்துடன் 1951-1952 இல்; நடைபெற்ற இலங்கைப்; பல்;கலைக்கழகத் தமிழ் டிப்ளோமாப் பரீட்சையிலும் சித்தியடைந்தவர். பாலபண்டித,பண்டித பரீட்சார்த்திகள் பலருக்கும் பரோபகார சிந்தனையுடன் கற்பித்துப்பலன் கண்டஅனுபவசாலி. எல்லாவற்றுக்கும் மேலாக சேவைக்காலம் முழுவதும் அளவெட்டி அருணோதயக்கல்லூரி தலைமைத் தமிழ்ப் பண்டிதராகவிருந்து உயர்கல்வி மாணவரின் தமிழ் இலக்;கணத் தேர்ச்சிக்கு அயராது உழைத்தவர். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச்சங்க நிர்வாக சபையில் 1948 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இணைந்து 1952ஆம் ஆண்டு முதல் அச்சங்கத்தின் தனாதிகாரியாகப் பலவருடங்கள் கடமையாற்றியவர். அச்சங்கப் பரீட்ச கராகவும் பாடவிதான அமைப்புச்சபை உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம், இரண்டாம் பாகம், செய்யுளியலும் அணியியலும் (முதற்பகுதி), அகத்;திணையியலும் புறத்திணையியலும் (இரண்டாம்பகுதி) மெய்ப்;பாட்டியலும் மரபியலும் (மூன்றாம்பகுதி) போன்ற பல நூல்களை ஆக்கியவர். வலிகாமம் வடக்குப் பண்டகசாலைகளின் சமாச இயக்குநர் சபை உறுப்பினராக 1963 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்;பட்டார். 1966 இல் அச்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அளவெட்டி மல்லாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்து சங்கத்தை வழிநடத்தி வந்துள்ளார். இவரது ஆக்க இலக்கியப்பணிகளை கௌரவிப்பதற்காக 1986 ஆம் ஆண்டில் நாகவரதநாராயணர் தேவஸ்தானம் பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியதுடன் அதே தேவஸ்தானம் 2002 இல் இலக்கண வித்தகர் என்ற பட்டம் சூட்டிக் கௌரவித்தது. வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை ‘கலைச்சுடர்” என்ற விருதினை வழங்கிப் பெருமைப் படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது. 2010-12-26 நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.