சிவபக்தனான இராவணனை இராமபிரான் வதம் செய்த பின்னர் வடதிசை நோக்கிச்செல்லும் வழியில் சிவபூசை செய்வதற்காக அமைக்கப்பட்ட சிவலிங்கம் தான் நவசைலேஸ்வரர் ஆலயம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வாலயத்திற்காக அமைக்கப்பட்ட தீர்த்தமாக நிலாவரை வற்றாத நீர் ஊற்றுக் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. நிலாவரை வற்றா நீர் ஊற்று 52 அடி, நீளம், 37 அடி அகலம் கொண்ட நீள்சதுர வடிவில் நிலமட்டத்திலிருந்து 14 அடி ஆழத்தில் நீரைக்கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.