நான்கு ஆலயங்கள் ஒன்றையொன்று அடுத்து மற்றதாக அமைந்திருக்கும் கோயில்களில் முதலாவதாக சிவன் ஆலயமும், இரண்டாவதாக அம்மன் ஆலயமும். மூன்றாவதாக பிள்ளையார் ஆலயமும், நான்காவதாக முருகமூர்த்தி ஆலயமும் அமைந்திருப்பதுடன் தனித்தனி உள்வீதிச் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டிருந்தாலும் வெளிவீதியென்பது இந்நான்கு ஆலயங்களிற்கும் ஒன்றேயாகும். இத்தகைய சிறப்புக்களைப்பெற்ற ஆலயங்களில் ஒன்றே ஏழாலை சிவன் கோயிலாகும். இவ்வாலயமானது ஆரம்பத்தில் அலங்காரத் திருவிழாவாக நடைபெற்று வந்தது. பின்னர் ஊர்மக்கள் பெருந்திருவிழாவாக மாற்றுவதற்கு விருப்பங்கொண்டு தேர்த்திருப்பணிச் சபையொன்றினை ஸ்தாபித்து தேர் செய்து மகோற்சவம் நடைபெறும் முறையை உருவாக்கினர். அந்தவகையில் ஒவ்வொரு வருடத்திலும் ஆனி உத்தரத் திருநாளை தீர்த்தோற்சவமாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.