Friday, May 17

பேராசிரியர்; ஜெயராசா, சபாரத்தினம்

0

அறிமுகம்

ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், கல்வியியல் துறைத்தலைவர், இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறைத் தலைவர,; பதில் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி, பதில் கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய பேராசிரியவர்கள்  கல்விமாணிப்பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி முதுமாணிப்பட்டத்தினை  கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப்பட்டத்தினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர்.

 கல்வி என்பது மனித குலத்துக்கு மிக அவசியம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. கல்வியின் பயனை உணர்ந்து கல்வித்துறையில் பல வளர்ச்சிகளையும் கண்டிருக்கின்றோம். “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற கருத்துப்படி இன்று சாதாரண ஏழை மக்களும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டுமென்ற முனைப்புடன் க~;ட சூழலிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வருகின்றார்கள்.

 “ வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் – இங்கு

 வாழும் மனிதருக் கெல்லாம்

 பயிற்றுப் பலகல்வி தந்து – இந்தப்

 பாரை உயர்த்திட வேண்டும்.”

 என்று பாரதியின் கனவை நனவாக்க முனைப்புக்காட்ட வேண்டும். வாழ்க்கையின் மதிப்புக்களை உயர்த்தவும், இலட்சியங்களை நிறைவேற்றவும் பெரிதும் உதவியாக இருப்பது கல்வி தான். கல்விச் செல்வமே அழியாத செல்வம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள பல கிராமங்களிலே ஆத்மிக உணர்வும் கலை உணர்வும் மிக்கவர்கள் செறிந்து வாழும் கிராமங்களில் ஒன்றாகத் திகழ்வது இணுவைêர். பயிர்ச்செய் நிலங்களும் பாடசாலைகளும் கோயில்களும் மற்றும் சனசமூக நிலையங்களும் நிரம்பிய ஊராக இணுவையுர் உள்ளது. இவையே இக்கிராமத்தின் தனித்தன்மைகளை வெளிப்படுத்தும் மூலங்கள்.

 வீரமணிஐயர், பண்டிதர் இ. திருநாவுக்கரசு, பண்டிதர் க. செ. நடராஜா, ஆடற்கலைஞர் ஏரம்பநாதர், சுப்பையா மாஸ்டர், நாதசுவர வித்துவான் என். ஆர். கோவிந்தசாமி, தவில் வித்துவான்கள் வி. தெட்சணாமூர்த்தி, என். ஆர். சின்னராசா, நாடகக் கலைஞர் வி. மாசிலாமணி, வயலின் கலைஞர் வி. உருத்திராபதி, தத்துவஞானி வடிவேல் சுவாமிகள் போன்ற பல்வேறு ஆளுமைகள் நிரம்பிய கிராமம். இவர்களது வழித்தோன்றல்கள், புலமை மரபுகள், கலை மரபுகள் இன்று வரை அறாத் தொடர்ச்சி பேணி வருபவை. இந்த மரபுகள் வழிவரும் ஊற்றுகளும் ஓட்டங்களும் இணுவையுரையும் கடந்து தமிழ்கூறும் நல்லுலகு வரை கரைபுரண்டு ஓடுகிறது.

 இத்தகு கிராமத்தின் வளங்களையும் ஆளுமைகளையும் உள்வாங்கி மடைமாற்றக் கையளிப்பில் இன்றுவரை உயிர்ப்புமிகு ஜீவியாக இயங்கி வருபவர் பேராசிரியர் முனைவர் சபாரத்தினம் ஜெயராசா. சண்முகம் சபாரத்தினம் அபிராமி அம்மாள் தம்பதியரின் புதல்வனாக 1940-02-27 ஆம் நாள் பிறந்தார். இவர் இலங்கை பல்கலைக்கழக மரபுவழி வந்த கல்விசார் அமிசங்களையும் மற்றும் மரபுவழிக்கல்வி அமிசங்களையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர். இடதுசாரி சிந்தனைவளம் கொண்டு சமூக அசைவியக்கம், சமூகக் கட்டமைப்பு, சமூக இலக்குகள் முதலியவற்றால் கல்விமுறை, கல்வி இலக்குகள் நெறிப்படுத்தப்படும் பொழுது அதற்கிசைந்தவாறு கற்பித்தலியலும் முகிழ்த்தெழும் என்கின்ற சிந்தனை ஓட்டத்தினை அறிவு ஆய்வு சார்ந்து வெளிப்படுத்தும் முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுதற்கான பின்புலத்தை இவரது வாழ்புலம் முழுமையாக வழங்கியது.

 பேராசிரியர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் மத்திய கல்லூரியில் ஆரம்பித்தார். அங்கே நடராஜா, சீவரத்தினம், ராஜதுரை, கந்தையா, கந்தசாமி போன்ற ஆசிரியர்களிடம் கல்வி கற்றார். தனது இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் தொடர்ந்தார். அப்பொழுது ஹண்டி பேரின்பநாயகம், பண்டிதர் எம். சின்னத்தம்பி வி.கே.நடராஜா,அதிபர் தம்பர் போன்றவர்களிடம் கல்விகற்றார். இந்த ஆளுமைகளது தாக்கத்துக்கும் உட்பட்டார். மத்திய கல்லூரியில் உயர்தர மாணவர்கள் ஒன்றிணைந்து மத்திய தீபம் என்னும் இதழை  வெளியிட்டார்கள். இந்த இதழ்ப் பணியிலும் மாணவர் ஜெயராசா பங்குகொண்டார்.

1963 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் டீநுன பட்டப்படிப்பில் இணைந்து கொண்டார். கல்வியியல் பாடத்துடன் தமிழ், பொருளியல், புவியியல் போன்ற பாடங்களையும் படித்தார். அப்பொழுது பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், தனஞ்சயராஜசிங்கம் மற்றும் கல்வியியல் பேராசிரியர் போன்றவர்களிடமும் பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. இவர் கற்ற தமிழ் பொருளியல், புவியியல், கல்வியியல் போன்ற பாடங்கள் துறைசார் அறிவுகளின் ஊடாட்டத்தை ஆழப்படுத்தின, அகலப்படுத்தின. இதற்கான சிந்தனை மரபுகளையும் அறிதல் முறைகளையும் கலாசரா விழுமியங்களையும் கையளித்தன.

 ஆரம்ப பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகப் படிப்புவரை செழுமையான புலமைப் பாரம்பரியம் படிப்படியாக இவரிடம் கையளிக்கப்பட்டு வந்ததனைக் காணலாம். பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக் கழகம் போன்ற உயர்தர கல்வி நிறுவன மரபு சார்ந்த அறிக்கைக் கையளிப்பு, அறிவு ஆய்வு சார்ந்த பின்புலத்தில் புதிய கலாசார உணர்திறன்களை புதிய சிந்தனை மரபுகளை விமரிசன நோக்கு முறைகளை பன்முகரீதியில் விருத்தி செய்தன. அதாவது முதுகலைமாணிப் பட்டம், முனைவர் பட்டம் போன்றவை அறிகைச் சமூகவியல் என்னும் துறையை மேலும் விரிவாக்கி ஆளமாக்கின. பேராசிரியர் எனும் சுட்டுதலுக்குரிய தகுதிக்குரிய சால்புகள் வெளிப்பட்டன. தன்னைத் தனித்து அடையாளம் காட்டுமளவிற்கு சாதகமான நிலைமைகள் உருவாகின. இதற்கான கடும் உழைப்பு இவரிடம் வெளிப்பட்டன.

வடமராட்சி தும்பளையைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை இராஜரத்தினம் தம்பதிகளின் புதல்வியான பானுமதி அவர்களை தனது வாழ்க்கைத் துணையாக கரம்பற்றி இல்லற வாழ்வில் கோகுலன் என்னும் நாமமுடைய புதல்வனைப் பெற்று மகழ்ந்ததுடன் அர்ச்சனா என்னும் நங்கையை மருமகளாகவும் பெற்று யதுகுலன், துவாரகன் என்னும் பேரப்பிள்ளைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். கலைப்பட்டதாரியான வாழக்கைத் துணைவியார் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

 கல்விப் பணியில் பேராசிரியர்.

இவர் பாடநூல் ஆக்கக் குழு, ஆசிரியர் – அதிபர் போன்ற பணி வகிபங்குகளை வகித்து பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் போன்ற பதவிகளையும் அடைந்து தன்னளவில் ஓர் முதிர்ச்சிக் கட்டத்தையும் வெளிப்படுத்தினார். ஆசிரியப் பணியில் ஆரம்பித்து பேராசிரியராக பணி ஓய்வு பெற்றார்.

    நெல்லியடி மத்திய கல்லூரி         – ஆசிரியராக ஆரம்பம்.

    கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி – ஆசிரியர், பிரதி அதிபர்.

    கல்வி வெளியீட்டுத் திணைக்களம்   – பாடநூலாக்கக்குழு.

 யாழ் பல்கலைக்கழகம்              – கல்வியியற்துறை விரிவுரையாளர் நியமனம் பெற்று பேராசிரியராக உயர்ந்தவர். கொழும்பு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியதுடன் பல்வேறு உலக ஆய்வு மாநாடுகளில் பங்கு  கொண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

பன்முக ஆளுமைத் திறன்களுடன் இயங்கும் ஆசிரியர், ஆய்வாளர் என்னும் தகுதிகளுக்கான தரத்தைத் தொடர்ந்து மேம்படச் செய்தார். இதன் விளைவாக எண்ணற்ற கட்டுரைகளும் நூல்களும் உருவாகின. கல்வியியல் துறையில் அதிகம் தமிழ் நூல்களை எழுதிக் குவித்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவரே சபா ஜெயராசா மற்றவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன். இவர்கள் இருவரும் ஒரே துறையில் ஒரே காலத்தில் ஒன்றாகப் படித்து வந்தவர்கள். பின்னர் கல்வியியல் துறையில் பேராசிரியர் என்ற தகுதிக்கும் உரித்தானவர்கள். இந்தப் பெருமை இவ்விருவர்க்கும் மட்டுமே உரித்தானது.

தொல்சீர் கலை மரபுகளையும் நாட்டார் கலைமரபுகளையும் மற்றும் நவீன கலைமரபுகளையும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யும் போக்கை இவரிடம் காணலாம். இதனை மேலும் வலுப்படுத்தி ஆளப்படுத்தினார். குறிப்பாக தமிழிசை மரபின் வேர்களை அறிந்து கொள்வதற்கான பாடப்பரப்புகளை அறிமுகம் செய்தார். பரத நடனம் தொடர்பிலான தமிழ் நிலைப்பட்ட ஆய்வுமூலத் தேடுகையில் ஓர் புதிய கலாசார சிந்தனை முறையை உருவாக்கினார். இது தொடர்பிலான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார். இவை மூலம் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

 பேராசிரியர் கலை இலக்கியத்துறைகளிலும் மிகுந்த ஆர்வமும் காட்டி வந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் ஆரம்பத்தில் தொடர்பு கொண்டவராக இருந்தார். பிரேம்ஜி, நந்தி, நீர்வை பொன்னையன், இளங்கீரன், டானியல், டொமினிக்ஜீவா, அன்ரனிஜீவா, யோகநாதன், பெனடிக்பாலன் போன்ற எழுத்தாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக இருந்தார். எழுத்தாளர் சங்கச் செயற்பாடுகளுடனும் பங்கு கொண்டு வந்தார். இதைவிட யாழ்ப்பாணம் இளம் எழுத்தாளர் சங்கத்தை கலாபரமேஸ்வரன் மற்றும் டாக்டர் மகாலிங்கத்துடன் இணைந்து ஆரம்பித்தார். தொடர்ந்து இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வந்தார். தன்னளவில் கலை, இலக்கியம் சார்ந்த படைப்புகளை வாசிப்பதும் அவை சார்ந்த விமர்சனக் குறிப்புகளை, ஆய்வுகளை எழுதுவதிலும் அதிகம் அக்கறை காட்டி வந்தார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே. கனகரத்தினா, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சோ. கிரு~;ணராஜா, முனைவர் சுரேஸ்கனகராஜா போன்றவர்களுடன் அதிகம் ஊடாடி வந்தார். கலை இலக்கியம், பண்பாடு, தத்துவம் சார்ந்த உரையாடல்களை பல்வேறு நிலைகளிலும் பல்வேறு தளங்களிலும் மேற்கொண்டு வந்தார். இதனால் நவமார்க்சியம், மார்க்சிய உளவியல், சமூகவியல், சமூகமெழியியல், பண்பாட்டியல், நுண்கலையியல் போன்ற துறைகளில் அதிகம் விருப்பம் கொண்டு செயற்பட்டார். பல்வேறு புதிய சிந்தனைகளை விமர்சனங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளை நூல்களை எழுதி வந்தார். சமகாலச் சிந்தனைத் துறையில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களை புதிய வளர்ச்சிகளைக் கற்றுக் கொண்டு வந்தார். அவற்றைத் தமிழில் எடுத்துரைக்கும் பெரும்பணியிலும் ஈடுபடத்தொடங்கினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, யாஃகோப்பாய் ஆசிரிய கலாசாலை, யாஃபலாலி ஆசிரியர் கலாசாலை, யாழ் பொது நூலகம் ஆகிய நிறுவனங்களது அழைப்பின்பேரில் நிபகழ்த்திய  பேராசிரியர் க. கைலாசபதி நினைவுப் பேருரை, பேராசிரியர் ப. சந்திரசேகரம் நினைவுப் பேருரை, அமரர் சீமாட்டி லீலாவதி சேர்.பொன். இராமநாதன் நினைவுப் பேருரை, கனகரத்தினம் நினைவுப் பேருரை, அமரர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் நினைவுப் பேருரை, அமரர் வனசிங்கா நினைவுப் பேருரை, அமரர் கார்த்திகேயன் நினைவுப் பேருரை, தனிநாயகம் அடிகளார் நினைவுப் பேருரைகள் இவருடைய ஆய்வுப்புலத்தினதும் பேச்சாற்றலினதும் வன்மையை எடுத்துகாட்டி நிற்கின்றன.

கல்வியியலில் பல்வேறு புதிய போக்குகளை மாற்றுக் கோட்பாடுகளை அறிமுகம் செய்தார். கல்வி உளவியல், கலைத்திட்டம், கல்வித் தத்துவம், கற்பித்தலியல் போன்ற பாடங்களின் அறிவை விசாலப்படுத்தினார். புதுப்புது விடயங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தார். தமிழில் பேராசிரியர் சபாவின் நடை சற்று கடினமானது, இறுக்கமானது என்ற விமரிசனம் உள்ளது. ஆனால் பேராசிரியர் பல்வேறு புதிய எண்ணக்கருக்களை சொல்லாடல்களை மற்றும் கோட்பாடுகளை தமிழில் கொண்டு வருகின்றார். சமகால சிந்தனை மரபுகளுடன் தமிழைத் தொடர்புறுத்தும் அதன் மூலம் தமிழை வளப்படுத்தும் பெரும் பணிகளில் சாட்சியாகவே பேராசிரியரது சமீபகால நூல்களை நாம் நோக்க வேண்டும்.

இதுவரை பேராசிரியரிடம் படித்த மாணவர் தொகை அதிகம். பட்டப்படிப்பு முதல் பட்டப்பின் படிப்பு மற்றும் முதுகலைமாணி, முனைவர் பட்டம் வரை இவரிடம் படித்தவர்களது பட்டியல் நீளும். சமூகவியல், உளவியல், தத்துவம், மொழியியல், மானுடவியல், கலையியல் போன்ற துறைகளில் அறிவு விருத்தி, பண்பு விருத்தி மாணவர்களிடம் முழுமையாக தெளிவாகக் கையளிக்கப்பட்டு மாணவர்களது சிந்தனைத் துறையை ஆய்வு முறையை மாற்றியமைத்து வருகின்றார். புதிய சிந்தனைக் கோலங்களை சொல்லாடல்களை உற்பத்தி செய்துள்ளார். பேராசிரியர் சபாஜெயராசா வழிவரும் புலமைப் பாரம்பரியம் தனித்து அடையாளம் காணும் வகையில் புதிய கிளைகளை விட்டு வளர்ந்து வருகின்றது. இந்தியாவிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகம,; அழகப்பா பல்கலைக்கழகம், அன்னை திரேசா பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் போன்றன இவரது ஆளுமையினால் தங்களுடைய கலாநிதிப் பட்டத்தேர்வுக்கான பரீட்சகராக நியமித்துள்ளமை பெருமை கொள்ளும் விடயமாகும்.

உளவியல், சீர்மியம் போன்ற துறைகளில் பேராசிரியரது தனித்துவமான கண்ணோட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலைத்தேச சிந்தனை மரபுகளுடன் கீழைத்தேச சிந்தனை மரபுகள் வேறுபடும் புள்ளிகளை பண்பாட்டு வித்தியாசங்களை முரண்வெளிகளை மிக நுணுக்கமாக ஆய்வு ரீதியில் விமர்சனமாக வெளிப்படுத்தும் பாங்கு இவரது ஆளுமைக்கு எடுத்துக்காட்டு. பேராசிரியர் அனைவருடனும் அன்பாக தோழமையாக கலந்துரையாடும் சிறப்புகள் கொண்டவர். இது இவரது தனித்துவமான அடையாளம் எனலாம். மற்றவர்களை கௌரவப்படுத்துதல் மதித்தல் போன்ற செயற்பாடுகளை வழங்குவதில் தாராளத்தன்மை கொண்டவர். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற நிலைகளுக்கப்பால் சாதாரண மட்டத்தில் உள்ளவர்களிடம் கூட இவர் காட்டும் அக்கறை, நட்பு மெச்சத்தக்கது.

பேராசிரியர் கல்விச் சமூகத்துடன் மட்டுமல்ல பல்வேறு சமூக நிறுவனம் சார்ந்த பணிகளிலும் முழுமையாக விரும்புபவர். அத்தகு விழுமியங்களை இயல்பாகக் கையளிக்கும் திறன் கொண்டவர். மற்றவர்களது சுயமரியாதை, சுயத்துவத்தை அங்கீகரித்து வித்தியாசங்களை மதித்துப் பழகும், உறவாடும் உயர்பண்புகளைக் கொண்டவர். மனிதத்தை வளர்க்கும் நேசிக்கும் பண்புகளை வரித்துக் கொண்ட கோலத்தை வெளிப்படுத்துவதில் பேராசிரியர் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளார்.

தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பணியில் இருந்து உத்தியோகபூர்வமாக இவர்; விரிவுரை நிகழ்த்தி வருகின்றார். கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் ஆய்வுப் பணிகளில் பன்மடங்காக இந்த நடத்தைக் கோலம் இளந்தலைமுறையினருக்கு ஓர் வழிகாட்டியாக அமைகின்றது. கல்வி உளவியல், கல்வியியல், கலை இலக்கிய திறனாய்வு சார்பான நூல்களை வெளியிட்டுள்ளதுடன் இவற்றில் ஐந்து நூல்களுக்கு அரச சிறந்த இலக்கிய நூல் விருது கிடைத்துள்ளது.

உன்னதமான ஆசிரியருக்கு இருக்க வேண்டிய அறிவுப்பலத்தைக் கொண்டிருந்ததுடன், கால வளர்ச்சியோடு திரட்டிய அறிவைப் புதுப்பித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா அவர்கள் கல்வித்துறைக்கு ஆற்றிய பங்களிப்புஇகள் அளப்பரியன. பேராசான் மு.கார்த்திகேசன் தமிழியல் சார்ந்த புலக்காட்சியை வளம்படுத்துவதற்குத் தமது வளமான ஆங்கில அறிவையும் மார்க்சிய அறிவையும் பிரயோகித்தவர். இந்த அணுகுமுறை அவரது மாணவராகிய பேராசிரியர் கைலாசபதியால் மேலும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டது. அத்தகைய விருட்சங்களுக்கு இணையாக கல்வி, கலை, இலக்கியம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல்துறைப் பரிமாணங்களுடன் இன்றும் எம்மத்தியில் ஆளுமையுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் கல்வி பற்றிய தெளிவான தரிசனத்தைக் கொண்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறைப் பேராசிரியரான சபா ஜெயராசா அவர்கள் ஆணித்தரமான கருத்துகளைத் துணிவுடன் முன்வைப்பதில் முதன்மையானவர். இராமநாதன் நுண்கலைப்பீடாதிபதியாக இருந்த போது இசைப்பட்டதாரிகளை உருவாக்கும் பெருமுயற்சியில் வெற்றி கண்டவர். மார்க்சியம் சார்ந்து உளவியல், மானிடவியல், கல்வியியல், கலையியல் கருத்துகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது இறுக்கமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. பேச்சு வன்மையும், மதிநுட்பமும், எழுத்தாற்றலும் வாய்ந்த அறிஞன். அவரின் ஆளுமைக்குச் சான்றாக பல்துறை சார்ந்து இதுவரை தொண்ணூறு நூல்களுக்குமேல்  (90) வெளிக்கொணர்ந்துள்ளமையை குறிப்பி;டலாம்.

 கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும

கற்றல் உளவியல்

கல்விச் சமூகவியல்

இலங்கையின் கல்வி வரலாறு

உளவியல் முகங்கள்

இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

மொழிக் காலணித்துவமும் பரதநாட்டியமும்

கல்வியியலும் கணிப்பீட்டுயலும்

சீர்மிய உளவியல்

இசையும் சமூகமும்

புனை கதையியல்

பின்நவீனத்துவம் உரையாடல்

கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும்

கல்வியியலும் நிகழ் பதிவுகளும்

தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்

இளைஞர் இலக்கியம்

கல்வி நிலையங்களின் கதைகள்

கல்வி நுட்பவியல்

உலகக் கல்வி வரலாறு

கலைத்திட்டம்

கல்வியில் எழு வினாக்கள்

கலை இலக்கியக் களஞ்சியம்

குழந்தை உளவியலும் கல்வியும்

கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்

ஆசிரியர் வாண்மையியல்

கல்வியில் தொடர் வழிகாட்டி

தமிழியலும் திறனாய்வுக் கலைகளும்

உளவியல் ஊடு தலையீடுகள்

கல்வி அகராதி

சூழலியல் உளவியல் கலைவடிவங்கள்

சிறுவர் கலை இலக்கியம்

சமய உளவியல்

சமகாலக் கல்வி

இளம் வளர்ந்தோர் இலக்கியம்

தமிழர் கல்விச் சிந்தனைகள்

நாட்டாரியற் கல்வி

கல்வியில் தொடர் வழிகாட்எ

அரசியலும் கல்வியும்

தமிழர் உளவியலும் உளவளத் துணையும்

கலை இலக்கியங்களின் சமகாலம்

ஈழத்தமமிழர் கிராமிய ஆடல்

விருத்தி உளவியல்

சிறார் இலக்கியம் கிராமத்துக் கதைகள்

காலை நேரக் கதைகள்

அறிவியலும் பாட்டியின் கதைகளும்

சூழற் கதைகள்

விளையாட்டுக்களின் கதைகள்

புதிய கற்பித்தலியல்

கல்வி நிலையங்களின் கதைகள்

கடிகாரத்தின் கதை

மீன்களின் கதை

வண்ணத்துப் பூச்சிகளின் கதை

பூக்களின் கதை

பறவைகளின் கதை

கலையும் ஓவியமும்

தமிழர் உளவியலும் கல்வியும்

கல்விச் சீர்மியம்;

பால்நிலைச் சமத்துவமும் கல்வியும்

தியானமும் கல்வியும்

ஆடற்கலை

ஆடல் அழகியல்

அழகியற் கல்வி

புதிய கல்விச் சிந்தனைகள்

கலையும் திறனாய்வும்

ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்

ஆசிரியரும் உளவியலும்

காட்டின் கதை

பனங்கூடலின் கதை

குளத்தின் கதை

குப்பைமேட்டின் கதை

மாமரத்தின் கதை

அகராதியின் கதை

இசைக்கருவிகளின் கதை

கணிப்பொறிகளின் கதை

பாலத்தின் கதை

பள்ளிக்கூடத்தின் கதை

புத்தகத்தின் கதை

பாலர் கதைகள்

பாலர் விளையாட்டுக்கள்

பாலர் கல்விப் பாடல்

யாழ்ப்பாண அரசர் காலத்தில் வாழ்ந்த விகடப்புலவர்கள் கதைகள்

கலையும் உளவியல் வெளியும்

சமூக உளவியல்

கல்வியும் கலைத்திட்டமும்

கல்வித் திட்டமிடல்

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி

யாழ்ப்பாணத்து மரபுவழிக் கல்வியும் பண்பாடும்

கல்வியியல் புதிய சீர்திருத்தம்

ஆசிரியர் இயல்

கல்விக் கோட்பாடுகளும் இலக்கியக் கோட்பாடுகளும்

கல்வியியல் புதிய சீர்திருத்தங்கள் ஒரு விளக்கநிலை நோக்கு

தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலியலும்

சமகாலக் கல்வி வளர்ச்சி

பாடசாலையும் கல்வித்திட்டமும்

கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்

எண்ணக்கரு கற்றல்

அபிவிருத்திப் புவியியல் பொருளியல்

பியாசேயும் அறிகை உளவியலும்

உளவியலும் நவீன கற்பித்தலியலும்

உளவியல் முகங்கள்

பாலர் பாட்டுக்கள்

பாலர் கல்வி

குழந்தைக் கல்விச் சிந்தனைகள்

ஊர்வீதி – கவிதைகள்

உளநெறிக் கதைகள்   

இவற்றினை விட ‘மாட்டின் விக்கிரமசிங்காவின் சிறுகதைகளை’ தமிழில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

உலகப்புகழ்பெற்ற ஆய்வுச் சஞ்சிகையான நேற குசழவெநைசள in நுனரஉயவழைnஇ   வுhந அலவாiஉயட தழரசயெ முதலியவற்றிலும் தேசிய – சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

New Frontiers in Education,   The mythical journal  பதிப்பாசிரியராகவும் கல்வியியல் ஆய்வு சஞ்சிகையின் ஆசிரியராகவும் Educational Research – Quarterly Research Magazine பணியாற்றிய இவருக்கு உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நூட்பட்டியல் நிறுவனம் 2004ஆம் ஆண்டு (The Council for Educational journal Research) ஆண்டின் உலக மனிதர் விருதை வழங்கிக் கௌரவித்தது. கொழும்புத்தமிழ்ச் சங்கம் 2004ஆம் ஆண்டின் சங்கச்சான்றோர் விருது வழங்கிக் கௌரவித்தது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியிற் கல்லூரி கவிப்புலரி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றுக்கும் மேலாக 2011ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் “சாஹித்திய ரத்னா விருது” வழங்கிக் கௌரவிக்கப்படார். தற்பொழுது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் புலமைக்குழுத் தலைவராக செயற்பட்டு வரும் இவர் யாழ்ப்பாணத்தின் கல்வியியல் மற்றும் நூலாக்கங்களின் மிகச் சிறந்த ஆளுமையாம் பேராசிரியர் அவர்களது கல்விப்பணியினையும் ஆற்றுப்படுத்தற் பணியினையும் போற்றி வணங்குகின்றோம்.

 

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!