Sunday, November 3

கணக்காளர் மனுவல் ஜேக்கப் கில்பேட் குணம்

0

அறிமுகம்

புனித சாள்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழக வணிகமாணிப் பட்டதாரியான இவர் ஆசிரியராக, கணக்காளராக, பிரதம கணக்களாராக பதவிகளை வகித்து அரச கணக்கீட்டு முகாமையின் சிறந்த கணக்கியல் ஆளுமையாகத் திகழ்ந்தவர். யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தின் பங்கு ஆலயமாகக் கொண்டு றோமன் கத்தோலிக்க சமயத்தினை தழுவி வாழ்ந்து வருகின்றார். அன்புடனும் கௌரவத்துடனும் மற்றவர்களை வழிநடத்தி ஆலோசனை களை வழங்கி அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் மிகச் சிறந்த மனிதநேயமுடை  பண்பாளன்கணக்காளன்.

பாணன்பாடிப் பரிசு பெற்ற யாழ்ப்பாணத்தில் பாங்சால் வீதியில வசித்து வந்த கூத்துக் கலையில் சீர்மிகு கலைஞனாம் மனுவல்ஜேக்கப் மேரிமாகிறேற் தம்பதியரின் ஐந்தாவது புதல்வனாக 1961-07-26 ஆம் நாள் பிறந்தார். ஐந்து சகோதரிகளும், ஐந்து சகோதரர்களும் உடன் பிறந்தோராவர். பொறுப்புமிகு வாழ்க்கையில் தடம்பதித்து தனது அம்மம்மா வினதும் சிறிய தாயாரினதும் அரவணைப்பும் வளர்ப்பும் இவரது கல்வியில் உறுதுணையாய் அமைந்தன. விடா முயற்சியுடன் கற்றுச் சிறப்பான ஆளுமையினால் உயர்நிலையடைந்தவர்.

தனது ஆரம்பக் கல்வியை 1967 முதல் 1976 வரை யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயத் திலும், கல்வி பொதுத் தராதர உயர் கல்வியை வர்த்தகப் பிரிவில் 1977 முதல் 1980 வரை யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பயின்றவர். உயர்தர பரீட்சையில் சிதிதியடைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1981 முதல் 1985 வரை பயின்று வணிகமானி பட்டத்தினைப் பெற்று 1986 இல்  வெளியேறினார். பாடசாலைக் காலத்தில் இவருக்கு கற்பித்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் இவர் தனது மனதில் நீங்கா இடம்பிடித்த ஆசிரியர்களான புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபர் அமரர் .ஜோன்பிள்ளை மற்றும் 8,9ஆம் வகுப்பு கணிதபாட ஆசிரியை ஆசீர்வாதம் கிறிஸ்ரினா ஆனந்தராணி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி புவியியல் ஆசிரியர் அமரர் குமரய்யா, வர்த்தகம், கணக்கியல் கற்பித்த ஆசிரியர்களான .திலகரட்ணம், அமரர் உலகநாதன் மற்றும் அக் கல்லூரியின் உப அதிபரும் பொருளியல் ஆசிரியருமான இரட்ணசிங்கம் போன்றவர்கள் தனது கல்வியின் ஏணிப்படிகள் என குறிப்பிட்டு குருதட்சனை செய்கின்றார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே கணக்கியலில் இவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட பிரத்தியேக வகுப்புகளையும் யாழ்ப்பாணம் மவுண் கார்மேல் வீதியில் 1981 முதல் 1987 வரை நடத்தி வந்தார். நற்பணிகள் செய்வதிலும் ஆர்வம் இருந்தமையால்  நண்பர்கள் ஒன்று சேர்ந்து 1977 இல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் அருட்பணி. சகாயநாயகம் அவர்களின் ஊக்குவிப்போடு புனித வின்சன்ட்போல் சபை இளைஞர் பந்தியினை ஆரம்பித்து வறிய மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்தது மட்டுமன்றி யாழ்ப்பாணம் திருநகர் என்னும் சிற்றூரில் மாலை நேர பாடசாலையினை அச்சபையினூடாக நடத்தி வருவதில் முதன்மையானவராகச் செயற்பட்டார்

1992 ஒக்ரோபர் 28 ஆம் திகதி திருமணபந்தத்தில் இணைந்தார். வுரலாற்றுச் சிறப்புமிக்க நாயன்மார்கட்டு கிராமத்தினைச் சேர்ந்த அரியரட்ணம் சீதா தம்பதியினரின் சிரேஸ்ட  புதல்வியான ஜெனித்தா அவர்களை இல்லற  வாழ்வின் துணையாகக் கரம் பற்றி மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களையும் கல்வியில் உயரவைத்து அழகான குடும்பமாக மகிழ்ச்சியுடன்  வாழ்ந்து வருகின்றார்.

கணக்கீட்டு ஆளுமையாக

பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்பு 1987 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 14 ஆம் திகதி ஆசிரிய நியமனம் பெற்று காலி துந்துவ முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையினை பொறுப்பேற்று வணகத்துறை ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார்அப்பாடசாலை ஓர் பின்தங்கிய பாடசாலை அங்கேயும் தனது கடமையில் விருப்புடனும் சிறப்பாகவும்  ஈடுபட்டார். இதனூடாக நல்லதோர் முஸ்லிம் சமூகம் இவருக்கு நண்பர்களாக கிடைத்தனர். அப் பாடசாலையில் 1992 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி வரை கடமையாற்றினார்.

அப் பாடசாலையில் கற்றல் பணியில் இருந்த வேளையில் தனது பல்கலைக்கழக நண்பர் களின் ஊக்குவிப்பினால் இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பித்து அப் பரீட்சையில் சித்தியடைந்தார். 1992 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17 ஆம் திகதி அகில இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்தார். கணக்காளர் சேவையில் தனது முதலாவது நியமனத்தினை நல்லூர் பிரதேச செயலகத்தில்ஆரம்பித்து வர்த்தக அமைச்சின் பிரதம் நிதி உத்தியோகத்தராக (CFO)  பதவியுயர்வு பெற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தனது அறிவினை மேலும் விருத்தி செய்வதற்காக பல்வேறு விதமான குறுங்கால நீண்ட கால டிப்ளொமா கற்கை நெறிகளையும் பயின்றுள்ளார். குறிப்பாக Diploma in Government Accounting – 1999 இலும், Diploma in public Financial Management(DPFM) 2004 இலும், Higher National Diploma in Accountancy (HNDA) 2006 இலும், Diploma in Public Procurement And Contract Administration (DIPPCA) 2011 இலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் நிறைஞர் பட்டத்தினை (M.COM)  2008 இலும், பெற்று தன் கணக்கியல் அறிவினை மேலும் மேலும் வளப்படுத்தினார். Association of Public Finance Accountant  of Sri Lanka (APFA), The Chartered Institutes of Public Finance and Accountancy (CIPFA – London) ஆகிய நிறுவனங்களில் உறுப்பினராவமு; உள்hர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் கற்ற கல்வி மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டுமென்ற நிலையில் அரசாங்க உத்தியோகத்தர்களின் பல்வேறுபட்ட போட்டி மற்றும் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகளுக்காகப் பொது நிதி முகாமைத்துவம் என்ற நிதி ஒழுங்குவிதிகள் அடங்கிய நூலை 2001 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அந்நூலினால் பயன் பெற்றவர்கள் ஏராளம்.. அதன் கேள்வியும் நிரம்பலும் அதிகரித்தமையினால் அதனை தொடர்ச்சியாக மீள்பதிவு செய்து வெளியிட்டு வருகின்றமை மனங்கொள்ளத்தக்கது.

இவ்வாறு நீண்ட காலம் அரசதுறையில் கடமையாற்றியமைக்குச் சான்றாக இலங்கை பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவினால் 2015 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட அரச திணைக்களங்களின் கணக்கீடு மற்றும் செயற்றிறனை மதிப்பீடு செய்யும் போட்டியில் அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மூன்றாமிடத் தினைப் பெற்றுக்கொண்டதுடன் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் மாவடச் செயலக அலுவலர்களதும் பாராட்டுகளைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு பிரதம கணக்காளராக இடமாற்றம் பெற்றுக் கடமையாற்றிய காலத்தில் அப்போதைய அரசாங்க அதிபர் பணித்திருந்தகை நா.வேநாயகனதும் ஒத்துழைப்புடனும் செயற்படுத்திய கணக்கீட்டு முறைமைகளுக்காக 2017 இல் இரண்டாவது இடத்தினையும் 2018 ஆம் ஆண்டில் முதலாவது இடத்தினைப் பெற்று தங்க விருதினைப் பெற்றுக் கொடுத்தமை அவரது அளப்பரிய சுயநலமற்ற சேவைக்கு சானறாக அமைந்துள்ளது. அரச நியதிகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு மக்கள் பணியை செவ்வனே நிறைவேற்றிய பெருமைக்குரியவர். வருடாந்தக் கணக்கு களை முடிவுறுத்துவதில் முதலாவதாக முடிவுறுத்தும் அபார திறமையும் செயற்பாட்டுத் தன்மயுடைய கணக்காளராகத் திகழ்ந்தவர் என்பதனை அவருடன் பணியாற்றியவர்கள் அறிவர். நுpதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொது மக்களுக்கு முடிந்தளவு சேவையினை நிறைவாகச் செய்திருக்கின்றார். குறிப்பாக ஓய்வு பெற்றவர்களது ஓய்வூதியம் மற்றும் அவர்களது பணிக்கொடை என்பன விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைப்பதனை சிறப்பாக கையாண்டு செயற்படுத்திய பெருந்தகையாளன். இச் செயற்பாடு தன்னை எப்போதும் மனநிறைவு. கோள்ள வைத்துள்ளதாக குறிப்பிடும் கணக்காளர் குணம் அவர்கள் தனது அரச சேவையில் பின்வரும் படிகளை கடந்து வந்துள்ளார்,

  1. ஆசிரியர்காலிஃதுந்துவ முஸ்லிம் மகாவித்தியாலயம். – 1987.12.14 முதல் 1992.08.16
  2. கணக்காளர்பிரதேச செயலகம் நல்லூர் – 1992.08.17 முதல் 1999.05.31
  3. கணக்காளர்பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் – 1999.06.01 முதல் 2004.02.02
  4. கணக்காளர்பிரதேச செயலகம் தென்மராட்சி – 2004.02.03 முதல் 2006.04.23
  5. பிரதம கணக்காளர்மாவட்ட செயலகம் கிளிநொச்சி – 2006.04.24 முதல் 2007.06.26
  6. கணக்காளர்பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 2007.06.27 முதல் 2009.04.01
  7. கணக்காளர்பிரதேச செயலகம் தென்மராட்சி 2009.04.02 முதல் 2011.10.19
  8. பிரதம கணக்காளர்மாவட்ட செயலகம் கிளிநொச்சி – 2011.10.20 முதல் 2018.03.02
  9. பிரதம கணக்காளர்மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் – 2018.03.03 முதல் 2021.04.06
  10. பிரதம் நிதி உத்தியோகத்தர் (CFO) – வர்த்தக அமைச்சு கொழும்பு – 2021.04.07 முதல் 2021.07.25 வரை பணியாற்றினார்.

இவருடைய சேவையின் மாண்பினை கட்டியம் கூறுவதற்காகவே  கண்ககாளர்களது அதி உயர் பதவியினை ஓய்வு பெறுவதற்கு முன்பாக வர்த்தக அமைச்சில் பதவியுயர்வாகப் பெற்று கொழும்பில் கடமையாற்றி  2021.07.26 ஓய்வு நிலையினை அடைந்தார்.

கணக்காளராகக் கடமையாற்றிய ஆரம்ப  காலத்தில் பணியாற்றி அமரத்துவமடைந்த வர்களான உதவி அரசாங்க அதிபர் .மகாலிங்கம், நிர்வாக உத்தியோகத்தர் .வி.ரி.தியாகராசா, நிதி உதவியாளர் செல்லையா இரட்ணம் ஆகியோரின் பண்பான பேச்சும் உத்தியோகத்தர்கள் மீது காட்டும் ஊக்கமும் என்றும் நினைவுக்குரியது எனக் குறிப்பிடும் இவர் திருமதி கமலா சிவசிதம்பரம் அவர்களது நிர்வாகத்தில் பணியாற்றிய காலம் தனது பொற்காலம் எனவும் அவரினூடாக பல அனுபவங்களையும் தற்துணிவுடன் கடமையாற்றக்கூடிய ஆற்றலையும் தன்னுள் வளர்த்து தன் பணியினை நேர்வழியில் செவ்வனே நிறைவேற்றுவதற்கு ஆதாரமாய் அமைந்தவர் எனக் குறிப்பிட்டுத் தன் வாழ்க்கையில் மறக்கப்பட முடியாதவர் என நன்றியுணர்வுடன் பெருமை பாராட்டி நிற்கின்றார். மேலும் பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள் என பலருடன் பணியாற்றி கணக்கியல் துறையில் நீண்ட அனுபவத்தினை பெற்றுள்ளார். பிரதேச செயலாளர்களாகிய திரு எஸ்.ஸ்ரீநிவாசன், திரு பி.செந்தில்நந்தனன், திருமதி ரூபினி வரதலிங்கம் ஆகியோரும் தன் பணியின் ஊக்க சக்திகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2006-2007 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக அரசாங்க அதிபர் அமரர் ரீ.இராசநாயகம் அவர்களுடன் கடமையாற்றி காலம் போர்ச்சூழல் நிறைந்த இக்கட்டான காலமாக இருந்தாலும் இக்காலத்தில் எவ்வாறு மக்களுக்கான பணியினை ஆற்ற வேண்டுமென்ற அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையினூடாக மனப்பக்குவம், அர்ப்பணிப்பு என்பன போன்ற பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொண்டதாக குறிப்பிடும் இவர் 2011 முதல் 2018 வரை கிளிநொச்சி மாவட்டத்தில் அரச அதிபர்களான திருமதி ரூபவதி கேதீஸ்வரன், திரு சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருடன் கடமையாற்றிய காலத்திலும் நியாமான, நீதியான சேவையினை கண்ணியமாக வழங்க முடிந்தது.

ஓவ்வு பெறும் காலத்தில் அவரது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்தில் அதிலும் விசேடமாக அவரது பிறப்பிடமான யாழ்ப்பாணத்தில் கடமையாற்ற வேண்டுமென்ற விருப்பமு; நிறைவேறியது எனலாம். அதன் பயனாக அரச அதிபரான நா.வேதநாயகன் அவர்களுடன் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறும் அதேவேளை இடர்மிகு கொவிட்19 காலத்தில் அரச அதிபரான கணபதிப்பிள்ளைமகேசன் அவர்களுட னும் கடமையாற்றி தனது கடமையினை சிறப்பாக செயலாற்றுவதற்கு ஏற்ற வேலைச் சூழல் அமைந்தது எனவும் குறிப்பிடுகின்றார்.

தனது ஓய்வு காலத்தின் பின்னர் பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்ற குணம் அவர்கள் இலங்கை கணக்காளர் சேவையிலுள்ள கணக்காளர்களுக்கு முன்னுதாரணமாக காணப்படுகின்றார் என்பதும் தற்போது இச்சேவையிலுள்ள இளம் தலைமுறையினர் இவரை அடியொற்றி தமது சேவையினை வழங்குவதற்கு மனைவார்கள் என்பதும் திண்ணம். யாழ்ப்பாணப் பெட்டகம்-நிழலுருக் கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவையின் உறுப்பினர்களில் ஒருவராக தன்னை இணைத்துள்ள இவர் சனசமூக நிலையம், கத்தோலிக்க மறைமாவட்ட பணிகள், தான் கற்ற பாடசாலைகளில் செய்யக்கூடிய சேவைகள், மற்றும் அரச உத்தியோகத்தர் பரீட்சைக்கான வழிகாட்டல் வகுப்புகளை நடத்துவதுடன் முழு மனதுடன் முழுநேர சமூக சேவையளனக தன்னை ஈடுபடுத்தி எம் மத்தியில் வாழ்ந்து வருகின்ற கணிகீட்டு முகாமையின் மிகச் சிறந்த ஆளுமையினைப் போற்றுவோம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!