அறிமுகம்
யாழப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் ‘அரியாலை’ என்னும் பெருங்கிராமம். இக்கராமத்தில் தம்பிப்பிள்ளை சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வனாக 28.05.1947ஆம் நாள் உருத்திரேஸ்வரன் அவர்கள் பிறந்து அரசடி ஒழுங்கை, புலோலி கிழக்கு, பருத்தித்துறை என்னும் முகவரியில் வசித்து வந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாஃஅரியாலை சிறிபார்வதி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாஃமத்திய கல்லூரியிலும், தொழிற் கல்வியை கண்டி குண்டகசாலை விவசாயக் கல்லூரியிலும் கற்று பல்கலைக்கழகம் தெரிவாகி யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A (Cey.) பட்டத்தினை பெற்றார். யாழ் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்திய பரீட்சையில் சித்தி எய்தி ‘சைவப்புலவர்’ பட்டமும் பெற்றுள்ள இவர் அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் பணிபுரிந்தவர். பதவி வழியாக இலங்கை கமநல சேவைகள் திணைக்களத்தில் பெரும்பாக உத்தியயோத்தராக மாவட்ட தலைமை பெரும்பாக உத்தியோகத்தராகவும் மாவட்ட பதில் உதவி ஆணையாளராகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
நாடக ஆர்வமும் – அனுபவமும்
அரியாலை என்னும் பெருங்கிராமத்தில் பல சனசமூக நிலையங்கள், நாடக மன்றங்கள் நூற்றாண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றன. இவைகள் எல்லாம் வருடாந்த விழாக்கள், நாடகப்போட்டிகள், நாடகமேடையேற்றங்கள் போன்றவற்றை நடத்தி வந்துள்ளனர். இங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இசை நாடகம், புராண, இதிகாச, சரித்திர, சமூக நாடகங்கள் பலவற்றையும் பார்த்து மகிழ்ந்த காலம். திறந்த வெளி அரங்குகளில் நாடகங்கள் மேடையேற்றப்படும். இரவு 10 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 4,5 மணி வரை நாடகங்;கள் நடைபெறும்.
சிறுவயதில் இருந்து பல இடங்களில் பல விதமான நாடகங்களைப் பார்த்து ரசித்து வியத்த காரணத்தினால் மேடை நாடக நடிப்பில் ஆர்வம் கொண்டு தனது 15வது வயதில் ஒரு நாடகப்போட்டியில் ‘தாய்’ என்ற நாடகத்தை மேடையேறி நாடக உலகிற்குள் காலடி வைத்தார். இதன் பின் ஒரு சில நாடகங்கள் மேடையேறி பின் சரித்திர சமூக நாடகங்களை நடித்து மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நடிகனாக உயர்ந்தார். தான் நடித்த தனது கிராமத்து சரித்திர நாடகங்களில் இராஜராஜசோழன் (இராஜராஜன்), எல்லாளன் (எல்லா ளன்), இலங்கேஸ்வரன் (இராவணன்) இன்னும் பல நாடகங்கள் அவருக்குப் பெருமை சேர்த்தன. இப்படியான நிலையிலுள்ள ஒரு தரமான நடிகனாக ஒருவித செருக்குடன் உலா வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் குழந்தை, ம.சண்முகலிங்கம் அவர்களை செயலதிகராகக் கொண்ட ‘நாடக அரங்கக் கல்லூரி – திருநெல்வேலியில் ஆரம்பிக்கப் பட்டது.
இங்கு மேடைநாடகத்திற்குரிய நடிப்பு நெறியாள்கை, ஒப்பனை இன்னும் பல துறைகளில் பயிற்சி வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. நானும் தனது நண்பருடன் 1978;இல் ஒரு சனிக்கிழமை திருநெல்வேலி இந்து இளைஞர் சங்க மண்டபத்திற்கு சென்று பெயரைப் பதிவு செய்து உள் பயிற்சியில் கலந்து கொண்டனர்;. அங்கு யாழ் மாவட்டத்தை சேர்ந்த பல இளம், மூத்த கலைஞர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் 5,6 பெண்களும் பயிற்சிக்கு ஆயத்தமாகி நின்றனர்.
இப்பயிலரங்கில் குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தாசீசியஸ் S.T. அரசர், T.S .லோகநாதன், சிசு.நாகேந்திரர் பிரான்சிஸ், சோ.தேவராசா, V.M..குகராஜா, A.T .பொன்னுத்துரை, ஜெயக்குமார், மற்றும் ஆனந்தராணி போன்ற இன்னும் பல நடிகர்களை சந்திக்கும் பொன்னான சந்தர்ப்பத்தைப்பெற்றார்.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களைத் தொடர்ந்து அ.தாசிசியஸ் அவர்களால் மூச்சுப்பயிற்சி, தளர்வுப் பயிற்சி, குரல்பயிற்சி போன்றவை நடத்தப்பட்டது. மதிய போசன இடைவேளைக்குப் பின் உலகத் தமிழ் நாடக வரலாறு உலக நாடக வரலாறு என்பன படிப்பிக்கப்பட்டது. இப்பயிற்சியின் பின்புலம் அவருக்கு புதுமையாக புதிய அனுபவமாகவும் இருந்தது.
அதன் பின் குழுவாக பிரித்து ஒரு சிறு பிரதியை அல்லது கவிதையை கொடுத்து நடித்துக் காட்டும்படி கூறினார்கள். வசன ஏற்ற, இறக்கம், உச்சரிப்பு, முகபாவம், கண்கள் அங்க அசைவுடன் கூடியதாக புதிய அனுபவத்தினைப் பெற்hர். தமது கிராம நாடகங்களில் நடித்து மக்கள் ஏமாந்தது தமக்குள் தாம் கர்வம் செருக்கு கொண்டிருந்தது எல்லாம் தவறு என புரிந்து கொண்டமையை உணர்வோடு நினைவு கூரும் உருத்திரேஸ்வரன் அவர்கள் பயிற்சிக்கு வாரரவாரம் தொடர்ந்து இடைவிடாது சென்றார்.
இந்தக் காலக்கட்டத்தில் திரு.குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது வீட்டில் வார நாள்களில் மாலையில் ஜி.சி.ஈ உயர்தர பரீட்சையில் ‘நாடகமும் அரங்கிய லும்’ பரீட்சைக்கான பாட வகுப்பரினை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் 15 மாணவர் கள் ஆர்வத்துடன் சமூகம் கொடுத்தார்கள். பின்பு அது படிப்படியாக குறைந்து ஐந்தாகி மூன்றாகி பின் உருத்திரேஸ்வரன் மட்டும் எஞ்சி நின்றார். எவ்வித பாட விதானமும் எழுத்தில் இல்லாத ‘நாடகமும் அரங்கியலும்’ என்ற பாடத்திற்கு ‘தமிழ் நாடக வரலாறு’ உலக நாடக வரலாறு செயல் முறை (practical) உள்ளடங்கிய பாடவிதானம் முதல் முதலாக திரு.குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் தயாரிக்கப்பட்டு பல தமிழ் ஆங்கில புத்தகங்களை வாசித்து குறிப்புகளும் Sir கூறக்கூற தான் கொப்பியில் எழுதி Notes தயாரித்தமையையும் Sir இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாழாக்;காது அதிகாலை எழுந்து படித்து பரீட்சை எழுதி A பெறுபேற்றினையடைந் தமையையும் ‘A’ பிரிவில் சித்தியடைந்த முதல் தமிழ் பரீட்சாத்தி என்ற பெருமையையும் பெற்றவர்.
அரங்கியற் செயற்பாட்டாளரான இவர் குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தாசீசியஸ், S.T. அரசர், பேராசிரியர் சி. மௌனகுரு, A.T பொன்னுத்துரை, V.M .குகராஜா, ஜெனம் பிரான்சிஸ் ஆகியோரிடம் நாடகப் பயிற்சியினை முறையாகப் பெற்று பல்வேறு நாடகங்களை தன்னை ஆளுமையுடைய கலைஞனாக வெளிப்படுத்தினார். இவருடன் அரியாலையூர் க.சண்முகலிங்கம், க.விஜயரத்தினம், த.பஞ்சலிங்கம் போன்ற கலைஞர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆசிரியர் சதாசிவம், S.T .கணநாதன். குழந்தை ம.சண்முகலிங்கம், அ.தாசீசியஸ், S.T .அரசர், பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோரது நெறியாள்கையில் நல்ல கதாபாத்திரங்களில் பல நாடகங்களில் நடித்த பெருமையுடையவர்.
இத்தகைய அனுபவங்களினூடாக நாடகப் பட்டறைகளை ஒழுங்குசெய்து நடத்தும் அறிவுடையவராக மிளிர்ந்தார். அந்த வகையில் 2010ஆம் ஆண்டு கனடா – ஸ்காபுறோ நகரில் நாடகக ;கலைஞர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கமைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த நாடக மன்றங்கள்
சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நாடகங்கள், அரியாலை சனசமூக நிலைய நாடகங்கள், அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய நாடகங்கள் நாடக அரங்கக் கல்லூரி
V.M குகராஜாவினால் தயாரிக்கப்பட்டு இலங்கை வானொலி புகழ் மு. ஆ.வாசகர் நெறியாள்கையில் உருவான “கதை இது தான”; என்னும் வீடியோ திரைப்படத்தில் நடித்தவர்.
பெற்ற கௌரவம்
அரங்கப் பணிகளுக்காக பல்வேறு அமைப்புகளும் அரங்கச் செயற்பாட்டாளரை மக்கள் முன் மதிப்பளிப்பதற்கு முன்வந்தன. அந்த வகையில்
- 2008ஆம் ஆண்டு யாழ் அரச அதிபரால் “கலைப்பரிதி” விருது வழங்கப்பட்டது.
- 2014ஆம் ஆண்டு இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் “கலாபூஷணம்” விருது வழங்கப்பட்டது.
- 2015 ஆம் ஆண்டு வடமராட்சி கல்வி வலயத்தால் “கலை வாரிதி’ விருது வழங்கப்பட்டது.
- 2017ஆம் ஆண்டு “கலைக்கலசம்” விருது வழங்கப்பட்டது.
நடித்த நாடகங்கள்
பாடசாலை காலத்தில் நடித்த நாடகப் போட்டி
- 37வது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நாடகப் போட்டி 15வது வயதில், நெறியாள்கை – அமரர் S.t. கணநாதன், நாடகம் – யார்கதாநாயகி, பாத்திரம் – “மரிக்கொழுந்து” என்ற தாய் வேடம்.
- அரியாலை சனசமூக நிலைய இல்ல நாடக போட்டி முதற்பரிசு, நாடகம் – மலிவானமாப்பிள்ளை , பாத்திரம் – முத்தாச்சி – என்ற தாய் வேடம்
சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் நடித்த நாடக விபரம்
- 1972ஆம் ஆண்டு 53வது விழாவில் “மருது பாண்டியர்” – கேர்ணல் வேல்டக
- 1973ஆம் ஆண்டு 54வது விழாவில் “நாகவல்லி” – மன்னன் வீரமாத்தாண்டன்
- 1974ஆம் ஆண்டு 55வது விழாவில் “ராஜபத்தினி” – மன்னன் ஜெயச்சந்திரன்
- 1975ஆம் ஆண்டு 56வது விழாவில் “ராஜநர்த்தகி” – மன்னன் குலோத்துங்கன்
- 1976ஆம் ஆண்டு 57வது விழாவில் “மாலிகபூர்” – பாதுட
- 1979ஆம் ஆண்டு 60வது வைரவிழாவில் “இராஜராஜசோழன்” – இராஜராஜசோழன்
- 1980ஆம் ஆண்டு 61வது விழாவில் “ராஜராட்சசன்” – ராட்சசன்
- 1981ஆம் ஆண்டு 62வது விழாவில் “மனோன்மணி” – குடிலன்
- 1993ஆம் ஆண்டு 74வது விழாவில் “இராஜராஜசோழன்” – இராஜராஜசோழன்
- 1994ஆம் ஆண்டு 75வது விழாவில் “எல்லாளன்” – எல்லாளன்
- 1995ஆம் ஆண்டு 76வது விழாவில் “இலங்கேஸ்வரன்” – இலங்கேஸ்வரன்
- 1999ஆம் ஆண்டு 80வது விழாவில் “இராஜராஜசோழன்” (சிலகட்டங்கள்) – இராஜராஜசோழன்
- 2015ஆம் ஆண்டு 96வது விழாவில் “பாரதியின் பாஞ்சாலிசபதம்” – துரியோதனன்.சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா நாடக போட்டியில்
- 1962ஆம் ஆண்டு 43வது விழாவில் “யார் கதாநாயகி” – தாய் மரிக்கொழுந்து – 1ஆம் பரிசு
- 1977ஆம் ஆண்டு 58வது விழாவில் “எதிர்பாராதது” – டாக்டர்- 3ஆம் பரிசு
- 1978ஆம் ஆண்டு 59வது விழாவில் “உயிரோவியம்” – அலெக்சாண்டர்- 2ஆம் பரிசு
- 1979ஆம்; ஆண்டு 60வது விழாவில் “நடு இரவில்” – திருடன் – பாபு – 1ஆம் பரிசும், சிறந்த நடிகருக்கான விருதும்.
அரியாலை சனசமூக நிலைய விழாவில்
- 1962அம் ஆண்டு – மலிவான மாப்பிள்ளை – தாய் முத்தாச்சி
- 1977ஆம் ஆண்டு – ராஜநாகம் – மன்னன்
- 1978ஆம் ஆண்டு – ராட்சசன் – ஞானதேவன்
- 1980ஆம் ஆண்டு – சகுந்தலை (இசை நாடகம்) – துர்வாச முனிவர்
- 1981ஆம் ஆண்டு ப.ஸ்ரீயின் – அபஸ்வரகீதம் – புரட்சியாளன்
- 1982ஆம் ஆண்டு ப.ஸ்ரீயின் – ஆத்மாவின் ராகங்கள் – இன்ஸ்பெக்டர்
- 1999ஆம் ஆண்டு சேரன் செல்வி – மன்னன் சேரமான் இடும் பொறை
அரியாலை மத்திய விளையாட்டு கழகம்
23 1975ஆம் ஆண்டு மனோகரா – மனோகரன் நாடக அரங்கக் கல்லூரி
- 1980ஆம் ஆண்டு ஏ.ஆ.குகராஜாவின் குழந்தை ம.சண்முகலிங்கம்
நெறியாள்கையில் “அவள் ஏன் கலங்குகிறாள்” (நவீன நாடகம்) – கடைக்கார சரவனண்
- 1981ஆம் ஆண்டு மஹாகவியின் “புதியதொரு வீடு”-மறைக்காடர்- நெறியாள்கை L.M றேமன்
- 1982ஆம் ஆண்டு மௌனகுருவின் “சங்காரம்” (வடமோடி ஆட்ட கூத்து) – இனபேத அரக்கன் (24 தடவைகள் மேடையேறியது) – நெறியாள்கை சி.மௌனகுரு
- 1986ஆம் ஆண்டு மௌனகுருவின் “சக்தி பிறக்குது” – ஆலை முதலாளி – பேரம்பலம்- நெறியாள்கை சி.மௌனகுரு
- 1982ஆம் ஆண்டு மௌனகுருவின் “குருஷேத்திரோபதேசம்” – நவீன கண்ணன் (4 தடவைகள் மேடையேற்றப்பட்டது.) – நெறியாள்கை சி.மௌனகுரு
- 1982ஆம் ஆண்டு நா.சுந்தரலிங்கத்தின் “அபசுரம்” (அபத்த சாயல் நாடகம்) –புறொபெர் (13 தடவைகள் மேடையேற்றப்பட்டது.) – நெறியாள்கை சி.மௌனகுரு
- 1983ஆம் ஆண்டு குழந்தை ம.சண்முகலிங்கத்தின் “கூடிவிளையாடு பாப்பா” -மனிதன்
- 1995ஆம் ஆண்டு குழந்தை ம.சண்முகலிங்கம் தொகுத்த ளு.வு.அரசர் நெறியாள்கை செய்த ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்” – துரியோதனன் (21 தடவைகள் மேடையேற்றப்பட்டது.)
- வேறு மன்றங்களில் நடித்தது.
- 1969ஆம் ஆண்டு கண்டி குண்டசாலை விவசாய கல்லூரி தமிழ் மன்றம் “பேசாத தெய்வம்”- கதாநாயகன்
- 1978ஆம் ஆண்டு அகில இலங்கை சேக்கிழார்மன்றம் தயாரித்த – S.T .அரசர் நெறியாள்கையில்
- சொக்கனின் ”தெய்வப்பாவை” – மன்னன் நெடுமாறன். – (2 தடவைகள் மேடையேற்றப்பட்டது.)
- 1977ஆம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி நூல் வெளியீட்டு விழா ஆசிரியர் சதாசிவம் நெறியாள்கை செய்த “நல்லை நகர்நாவலர்” – சேர்ஜேம்ஸ் லோங்டன்
- 1982ஆம் ஆண்டு நாவலர் நூற்றாண்டு விழா சபை ளு.வு அரசர் நெறியாள்கையில் நாவலர்’ – தியாகராசாயாழ் பட்டப்படிப்புக்கள் கல்லூரி – ஏ.ஆ.குகராஜா நெறியாள்கையில் கவிஞர் முருகையனின் “வெறியாட்டு” உரைஞர்ஃபிரமுகர் (20 தடவைகள் மேடையேற்றப் பட்டது)
- அரியாலை குருநகர் ஒன்றியம் – “உயிரோவியம்” – அலெக்சாண்டர்
- நல்லூர் கல்வி வலயம் – ஜெனம் பிரான்சிஸ் நெறியாள்கை செய்த குழந்தை ம.சண்முகலிங்கத்தின் “தியாகத் திருமணம்” – உரைஞர் (நாடக அரங்கக் கல்லூரி)
- நீர்ப்பாசன திணைக்களம் – வவுனியா தயாரித்த க.சண்முகலிங்கத்துடன் – “கர்ணன்”– துரியோதனன்.
- “ஒதல்லோ” – காஷியோ தெல்லிப்பளை இலக்கிய வட்டம் A.T .பொன்னுத்துரையின் பிரதி நெறியாள்கையில்
- “மிடாஸ்நகர மன்னன்” (தனி நடிப்பு) – (3 தடவைகள் மேடையேற்றப்பட்டது)
- இலங்கை போக்குவரத்து சபைக்காக “பாதுகை” – தசரதன் – (3 தடவைகள மேடையேற்றப்பட்டது)
- ஏ.ஆ.குகராஜாவின் “’கதை இதுதான் ” – முழுநீள வீடியோ திரைப்படம்
நெறியாள்கை செய்த நாடகங்கள்
.1 1976ஆம் ஆண்டு 57வது விழாவில் அரியாலை சிறுவர்களை வைத்து தயாரித்து நெறியாள்கை செய்த குழந்தை ம.சண்முகலிங்கத்தின் “புழுவாய் மரமாகி”.
2- 1980ஆம் ஆண்டு அரியாலை மாதர் பகுதியினருக்காக முற்றிலும் பெண்கள் நடித்த சொக்கனின் “தெய்வப்பாவை”.
3- 1990ஆம் ஆண்டு புலோலி ஞான சம்பந்தர்கலாமன்றத்திற்காக ‘புழுவாய் மரமாகி”.
4- 1991ஆம் ஆண்டு புலோலி ஞானசம்பந்தர் கலாமன்றத்திற்காக குழந்த ம.சண்முகலிங்கத்தின் “தியாகத திருமணம்”,
5- 1995ஆம் ஆண்டு ந.கிருஷ்ணசிங்கத்தின் “வீடுகள் விழிக்கின்றன”. (பஞ்சு கிருஷ்ணா என்ற பெயரில் சூதாட்டம் – சபதம்)
6- 2015ஆம் ஆண்டு 96வது விழாவில் “பாரதியின் பாஞ்சாலி சபதம்”,
சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் வகித்த பதவிகள்.
- 1974ஆம் ஆண்டு 55வது விழாவின் பொதுச் செயலாளராகவும்
- 1994ஆம் ஆண்டு 75வது விழாவின் கலைத் தலைவராகவும்
- 1995ஆம் ஆண்டு 76வது விழாவின் பொதுச் செயலாளராகவும்
- 1996ஆம் ஆண்டு 77வது விழாவின் (வரணி) பொதுச் செயலாளராகவும்
- 2000ஆம் ஆண்டு 81வது விழாவின் தலைவராகவும்
- 2001ஆம் ஆண்டு 82வது விழாவின் தலைவராகவும்
- 2005ஆம் ஆண்டு 86வது விழாவின் பிரதம விருந்தினராகவும்
- 2014ஆம் ஆண்டு 95வது விழாவின் சிறப்பு விருந்தினராகவும்
- 2016ஆம் ஆண்டு 97வது கலாசார விழாவின் பிரதம விருந்தினராகவும்
2 017ஆம் ஆண்டு 98ஆவது விழாவில் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக கௌரவிக்கப் பட்டதும் அரியாலை கிராமத்தின் முதலாவது கலாபூஷணம் மற்றும் சைவப் புலவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : கலைவாரிதி, உருத்திரேஸ்வரன் அவர்களின் ஓராண்டு நினைவு மலரிலிருந்து அவரது மகளின் அனுமதியோடு தொகுக்கப்பட்டதாகும்.
1 Comment
Excellent work done.