Tuesday, June 25

பௌராணிகர் வைரமுத்து சிவநேசன்.

0

‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே யவரோ

                                   டினங்கி இருப்பதுவும் நன்று”       ஒளவைப்பாட்டி (மூதுரை)

 பௌராணிகர் திரு. வ. சிவநேசன் அவர்கள், பெருங் கல்விமானாகவும், ஆன்மீக வாதியாகவும், புராணபடன வித்தகராகவும் விளங்குகின்றார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சைவமும் தமிழும் கலைகளும் ஆன்மீகமும் சிறப்புற்று விளங்கும்; மருதநிலமும், மாருதப்புரவீக மார்க்கமும் நிறைந்த புராதன பூமி அளவெட்டியாகும். அளவெட்டி அழகொல்லை பிரதேசத்தில் அளவோலை விநாயகரின் பாதார விந்தங்களை சதா வணங்கும் வைரமுத்து சரஸ்வதி தம்பதியினரின் இரண்டாவது புதல்வனாக 1941-09-10 ஆம் நாள் பிறந்தவர். திரு. சிவநேசன்  அவர்கள் சிறுபராயத்தில் அருணாசல உடையார் என்பவரால் அரம்பிக்கப்பட்ட அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கற்று ஆசிரியப் பணியில் இணைந்து கொண்டார். அளவையூர் சைவப்பெரியார் விஸ்வநாதன் மாஸ்ரர், சிங்கம் மாஸ்ரர்  ஆகியோரினால் பட்டை தீட்டப்பட்டவர். சிறுவனாய் இருந்த காலம் முதல் கல்வியுடன் திருமுறை ஓதுவதில் பெருவிருப்புடையவராய் விளங்கினார். இவ் அடித்தளம் அவரை பின்நாளில் ஆன்மீகமுடையோராய் சைவப் பற்றாளராய் மிகச் சிறந்த பௌராணிகராய் மிளிர வைத்தது.

1966 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியை அரம்பித்த இவர் ஓய்வு பெறும் காலம் வரை ஆசிரியத்துள் தன்னை முழுமையாக அர்ப்பணித்து மாணவர்களை நல்வழிப்படுத்திப் பணியாற்றியவர். யுhழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இயங்கிய அசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி ஆசிரிய மாணவனாக இணைந்து ஆரம்பக் கல்வி ஆசிரியராக முழுமை பெற்று அப்புத்தளை மகாவித் தியாலயத்தில்  ஆசிரியராகப் பணியை தொடர்ந்தார்.

1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவில் ஆசிரயராக இடமாற்றம் பெற்று வந்து பணியாற்றி அப்பாடசாலையிலே பகுதித்தலைவராக பதவியுயர்வு பெற்றதுடன் நன் மாணாக்கர் பலரை உருவாக்கியுள்ளார். ஆசிரியப் பணியின் மனநிறைவால் வையத்துள் தெய்வமாக வாழ்ந்து வரும் பௌராணிகர் சிவநேசன் ஐயா அவர்கள் 1996 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் தவப்பணியாம் சிவப்பணியின் திருமுறை ஓதுவதிலும் புராணபடனம் செய்வதிலும்  தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றார். ஈழத்திலுள்ள முக்கியமான தலங்கள் மட்டுமன்றி கிராமங்கள், ஊர்கள் தோறும் உள்ள ஆலயங்களில் இவர் திருமுறை முற்றோதும் பணியில் ஈடுபட்டு வருவதுடன் இப்பணியில் வளர்ந்து வரும் தலைமுறையினரையும் வழிப்படுத்தி வருகின்றமை மனங்கொள்ளத்தக்கது.

1975 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தில் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத விற்பன்னரான ஞானகுமாரி அம்மையார் அவர்களை தனது வாழ்க்கைத்துணயாக்கி மயூரன் என்னும் முருகன் திருநாமமுடைய புத்திரனைப் பெற்று மகிழ்ந்தார். தான் கற்பித்த பாடசாலையி லேயே தனது மகனையும் கல்வி பெற வைத்து இலத்திரனியல் துறையில் பொறியியலாளராக்கினார். இவர் இன்று ஸ்கொட்லாந்தில் பணிபுரிந்து வருகின்றார்.

புராணங்களிலும், இதிகாசங்களிலும், காப்பியங்களிலும், காவியங்களிலும், திருமுறை களிலும் மிகுந்த அறிவும் ஆற்றலும் பெற்ற சிவநேசன் ஐயா அவர்கள் ஈழத்தின் சைவ ஆலயங்கள் அனைத்திலும் திருமுறைகளை பாராயணம் செய்து வருவதுடன் அவற்றினை மற்றவர்களும் கற்றுப் பயனடையும் விதத்திலும் செயற்பட்டு வருகின்றார்.

கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் பக்திகொண்ட பௌராணிகரவர்கள் அப்புத்தளை மகா வித்தி யாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோதே கதிர்காமம் சென்று பஜனை செய்வதில் ஈடுபட்டு வந்தவர். இதன் பயனாக கதிர்காமத்தில் அன்பர்கள் பலரது உதவியுடன் தெய்வானை மண்டபம் அமைத்து பக்தர்கள் பலரை அரவணைத்து பஜனை நிகழ்த்தி வந்தார். கதிர்காமத்தில் இவரைத் தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லுமளவிற்கு கதிர்காமக் கந்தனாலயத்தில் தன்னை ஈடுபடுத்தி இன்றும் அப்பணியைத் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த அறிவும் இதிகாசம், இலக்கியம், காப்பியம், புராணங்கள் என அனைத்திலும் பட்டறிவும், மெய்யறிவும் கைவரப்பெற்றுள்ள சிவநேசன் ஐயா அவர்கள் பிறரை வருத்தாமை, பிறருக்குதவுதல், பிறரை நேசித்தல், பிறரை வழிப்படுத் துதல் என இன்னோரன்ன மானிடப் பண்புகளுடன் வாழ்ந்து வரும் இவர்; யாழ்ப்பாணச் சமூகத்தின் முதுசொமாகத்; திகழ்ந்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது.

மருதநிலமும், மாருதப்புரவீக மார்க்கமும் நிறைந்த புராதன பூமி அளவெட்டியாகும் அளவோலை விநாயகரின் பாதார விந்தங்களை சதா வணங்கும் திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் மகனான திரு சிவநேசன் அவர்களை 1975.08.22ஆம் திகதி கரம்பிடித்து உடுவிலின் வரம் கொண்டவர் சிவநேசன் அவர்கள். அவர்களுடைய ஏகபுத்திரரான மêரன் அவர்கள் பொறியியலாளராக ஸ்கொட்லாந்தில் கடமையாற்றுகின்றார். மருமகள் மேகதர்ஷினியாவார்.  அவர்கள் ஒரு இலட்சியக் குடும்பமாகத் திகழ்கின்றார்கள்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!