யாழ்ப்பாணத்தில் இசைக்கலைஞர் சூழ்ந்த இணுவில் எனும் ஊரில் மங்கள இசை மரபு பேணி வந்த திருமக்கோட்டை இரத்தினம் பாக்கிய தம்பதிகளுக்கு 18.09.1927 இல் பிறந்தவர்தான் என்.ஆர்.கோவிந்தசாமி அவர்கள். இவர் சிறு பராயத்தில் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். நாத இசைத்துறையில் கூடிய ஆர்வமுள்ளவராய் இந்திய நாடு சென்று தமிழ்நாடு தருமபுரம் நாதஸ்வரவித்துவான் அபிராமம் சுந்தரம் பிள்ளையிடம் முறையே நாதஸ்வர இசையினை ஆர்வமாகப் பயின்று வந்தது மட்டுமன்றிப் பயின்றவற்றை நன்கு சாதகம் செய்து சிறப்பாக இசை பயிலும் காலத்திலே தனது குருமாருடன் அவ்வூர் தேவஸ்தானங்களில் பூஜாகாலங்களின் தேவைக்கேற்ப நாதஸ்வர சேவை செய்ததும் உண்டு இணுவை திரு.என்.ஆர்.ஜி. உயரமான எடுப்பான தோற்றமுயைவர். பொதுமக்களுடன் அன்பாகப் பழகும் சுபாவமுடையவர். கோவிந்தசாமி தலை சிறந்த தவில் கலைஞர். திரு.என்.ஆர் சந்தானகிருஷ்ணன் அவர்களுடன் பிறந்தவர்களுள் இணுவை என் ஆர்.சின்னராஜா அவர்கள் அவர்கள் சிறந்த நாதஸ்வர இசைக்கலைஞராக இசை சேவை புரிகிறார். திரு.கோவிந்தசாமி அவர்கள் இந்துக் கோவில்களிலும் இந்துக்களின் சடங்குகளிலும் சம்பிரதாய மரபுகளைப் பின்பற்றி விஸ்தாரம் நிறைந்ததாகவும், சுருதிலய சுத்தமானதாகவும், இரசிகர்களை இசைமரபு வளர்த்தவர். இவருடைய நாதஸ்வர இசையானது இராச உற்சாகமூட்டக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும். பெரும்பாலும் தோடி, கல்யாணி, சங்கராபரணம், சகானா போன்ற இராகங்களை நீண்டநேரம் வாசிப்பார். இராகத்தைத் தொடர்ந்து வரும் கீரத்தனைகளை துரித காலத்திலேயே பெரும்பாலும் வாசிக்கும் தன்மையுடையவர் கச்சேரி ஆரம்பித்தால் தன்னை மறந்து தொடர்ந்து வாசிக்கும் – இயல்புடையவர். இவருடைய நாதஸ்வர சிறப்புப் பற்றி கொழும்பில் நடந்த ஆடிவேல் விழாவில் இவர் நன்கு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரு. கோவிந்தசாமி தன்னுடன் இந்திய நாதஸ்வர விற்பன்னர்களையும், தனது சகோதரர் சந்தானம், மைத்துனர்களையும், திருகோணமலை கணேசன் போன்றவர்களையும் தனக்குத்துணை நாதஸ்வரமாக அமர்த்தி வாசித்து வந்துள்ளார். இவருக்குத் தவில் வாசிப்பதற்கென இந்திய இலுப்பூர்நல்லகுமார் என்பவரை அழைத்து வைத்திருந்தார். மேலும் யாழ்ப்பாணத்து சிறப்புமிகு தவில் வித்துவான்களான தட்சணாமூர்த்தி, தனது சகோதரர் சின்னராஜா, நாச்சிமார் கோவிலடி கணேசபிள்ளை, ஆகியோரை 1963 ஆம் ஆண்டுவரை சிறப்புத்தவில்களாகவும் இணைத்து இசையைச் சிறப்புற வழங்கியும் பிற்காலத்தில் கொழும்பு பெரியசாமி, வீராச்சாமி ஆகியோர்களை தவில் வாசிக்கும் பொருட்டுச் சேர்த்து நிகழ்ச்சிகள் பலவும் நடாத்தி வந்துள்ளார்.
திரு. என்.ஆர்.ஜி அவர்கள் மாவை மாணிக்கவேலு தம்பதிகளின் புதல்வியான தனபாக்கியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் பயனாக வசந்தகுமார், இரத்தினகுமார், உதயகுமார், வாகீஸ்வரன் எனும் புதல்வர்களுக்கு தந்தையானார். இவர்களும் இன்று நாதஸ்வர இசைப்பணியில் இசையானது தீவகப்பகுதியில் இடம்பெறாத இடமே இல்லை எனலாம். தோடி, கல்யாணி, சங்கராபரணம், சகளை போன்ற இராகங்களை இராக ஆலாபனைக்கு எடுத்தக்கொள்ளும் இவர் உரிய கௌரவத்துடனும், நாதஸ்வர சம்பிரதாயங்களைக் கையாண்டும் தனது இசை வாரிசுகளாகப் பல நாதஸ்வரக் கலைஞர் பரம்பரையினரையும் உருவாக்கியவர்.
இணுவை என். ஆர். ஜிக்கு வழங்கப்பட்ட விருதுகளும் சிறப்புப்பட்டங்களும் பலவாகும். நாதஸ்வர இசையால் பக்தி இசைப்பணிபுரிந்த வித்துவான் அவர்கள் தளர்ந்த நிலையில் அவர் ஆற்றிய கலைப்பணிக்காக இவருக்கு உடுவில் ஸ்ரீசிவஞானப்பிள்ளையார் ஆதீனம் “சிவஞானவாரியம்” “லயநாத வாரிதி” என்னும் சிறப்புப் பட்டமளித்து கௌரவித்தது. இசை பரப்பிய நாதஸ்வர மேதை கோவிந்தசாமி அவர்கள் 1988.02.08 ஆம் நாள் 61ஆவது வயதில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். அமரர் கோவிந்தசாமி அவர்களின் இசைச்சேவை அளப்பரியது, பாரம்பரியமானது என்பதில் ஐயமில்லை.