யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை கிழக்கில் கதிரவேலு தையலாச்சி தம்பதிகளின் புதல்வனாக 1863 ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் என்பது இவரது பிள்ளைப்பராயப் பெயராகும். உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஞானகுரு ஈழத்தின் ஆறுமுகசுவாமிகள் தான் என கலாநிதி க.குணராசா அவர்கள் 2006 இல் வெளியிட்ட யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரிய தாகும். இவருடைய சமாதியானது தமிழ் நாட்டின் காமராஜர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ்நிலையத்திலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.