1944.09.20 ஆம் நாள் நல்லூரில் பிறந்தவர்.இசைத்துறையில் ஆர்வமுடைய இவர் திருகோணமலை இந்துக் கல்லூரியின் மேலைத்தேய வாத்திய அணியினரின் பயிற்றுநராகவும் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். இதனூடான இவரது இசைப் பயணமானது கலைவாணி இசைக்குழு என்ற ஒன்றினை நிறுவி இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து பல பாடகர்களுக்கும், வாத்தியக் கலைஞர் களுக்கும் வாய்ப்பளித்து தொழில்முறைக் கலைஞனாக வலம் வந்தார். ஆர்மோனியம், ஓர்கன், கிற்றார் உட்பட்ட இசைக் கருவிகளை இசைக்கும் திறன் கொண்டிருப்பதுடன், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தனது இசைப் பயணத்தின் மூலம் பல கலைஞர்களை உருவாக்கியதுடன், இந்திய இசைக்கலைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்கின்ற வேளையில் தனது ஹைரோன் என்ற அமைப்பினூடாக உதவிகளை வழங்கி செயற்பட்டவர். தென்னிந்திய சினிமாப் பாடகர்கள், இலங்கைப் பாடகர்களை இணைத்து சங்கீத மேகம், தேன்சிந்தும் நேரம் என்கின்ற இசை அல்பங்களை வெளியிட்டு இசையுலகில் நீங்காப்புகழ் பெற்ற இவர் 2006.12.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.