சிறுகதைகள், தொடர் புதினங்கள், வானொலி மேடை நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் மற்றும் தொடர்புதினங்கள் இலங்கை, இந்திய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரதுநூற்றுக்கும் மேற்பட்ட வானொலி தொடர் நாடகங்கள் இலங்கைவானொலியில் ஒலிபரப்பாகி யிருக்கிறது. பல மேடை நாடகங்களையும் எழுதி, இயக்கி மேடை ஏற்றியுள்ளார். தினகரனில் எழுதிய “அலைகள்”,“விவேகி”யில் எழுதிய ‘வன்னியின் செல்வி’, ‘அன்பு எங்கே?’ ஆகியதொடர் புதினங் கள் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றஎதிர்ப்புப் போராட்டங்களைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டன. “விடிவு நோக்கி” என்ற தொடர்நாவல் தினகரனில் வெளிவந்தது. ஆர்மோனி யம், புல்லாங்குழல் வாசிப்பதிலும், திரைச் சீலையில்ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார். இவரது மகள் மலரன்னை, மலரன்னையின் மகன் மலரவன் ஆகியோரும் சிறந்த எழுத்தாளர்கள் ஆவர். இலவு காத்த கிளி என்ற கதை அகிலஇலங்கை ரீதியில் முதற்பரிசு பெற்றது. கவிதையிலும் முதற்பரிசு பெற்றுள்ளார். வெளியான நூல்களாக பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (தனிக்கதை) (1969) பகுத்தறிவுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்தோட்டை, வன்னியின் செல்வி (நாவல்), (1963) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.