Saturday, June 22

முத்தையா, இராமலிங்கம்

0

தமிழ்த் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழி;ல் நுட்பங் களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். முத்தையா யாழ்ப்பாணம் சுண்டிக்குழியில் 1886-02-24 ஆம் நாள் பிறந்தவர். 1907 இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார். சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்ணியோவுக்குப் போக எண்ணியபொழுது,   ரெயில்வே இலாகாவில் வேலை செய்வதற்காக இணைந்து கொண்டார். சில நாள்களில் அவ் வேலையிலிருந்து விலகி ஐல்ஸ்பெரி அண்ட் கார்லாண்ட் என்ற பிரபலமான வணிக நிறுவனத்தில் வேலையில் இணைந்து கொண்டார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம லிகிதராக பதவியில்  உயர்ந்து, 1930 வரையில் பணிபுரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913 இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிடைத்தது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ்த் தட்டச்சுப்பொறி ஒன்றின் விசைத் தளக்கோலம். வலதுபுறம் இருக்கும் நகரா விசையைக்கவனிக்கவும் முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அமிசங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்கமுடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவாக உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்யவேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித் தார். அதாவது “வி” என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள “வ” வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப் பலகையின் வலப்பக்கம் இருக்கின்றன. முறையான விசைப் பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.முதலாம் உலகப் போர் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப்பலகையை செருமனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வணிக நிறுவனத்திடம் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப்பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க, “பிஜோ”, “ஐடியல்” ஆகிய “போர்ட்டபிள்” தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே “ஆர் ஸ்”, “எரிகோ”, “யுரேனியா”, “ஹால்டா” போன்ற தட்டச்சுகள் வெளியாயின. இன்று புதிய பரிமாணமாதக கணனி உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருப்பதனால் தட்டச்சின் முக்கியத்துவம் இழந்து விட்ட நிலைமையை காண்கின்றோம். கணனி வலையமைப்பினை விட தட்டச்சுப் பாவனை மிகவும் பாதுகாப்பானகொன்றாக இப்போதும் எப்போதும் விளங்கும் என்பது தான் உண்மை. 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!