Sunday, September 29

நடராசா, முத்தர்

0

1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். இந்தியா சென்ற இவர் இங்கு கிட்டப்பா பாகவதரிடம் இசைக்கலையைப் பயின்று அவரது மாணவனாகி அவருடைய நாடகங்களில் நடித்து வந்தார்.

 

தாயகம் திரும்பிய இவர் யாழ்ப்பாணத்தில் இசை நாடகத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிப்பு மேதைகளான சின்னையாதேசிகர், சீ.ரீ.செல்வராசா, வடிவேலு, பபூன் இரத்தினம், ஜெயராசா, சின்னச்செல்வராசா, சுப்புலட்சுமி, இந்திரா, சந்திரா, மணிமாலா போன்றவர்களுடன் இணைந்து இசை நாடகங்களில் தனது இணையற்ற நடிப்பினால் புகழ்பெற்றார்.

 

இவர் சரித்திர, புராண நாடகங் களான அரிச்சந்திரா, பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, ஏழுபிள்ளை நல்லதங்காள், ஸ்ரீவள்ளி போன்றவற்றில் கிருஸ்ணர், நாரதர், சிவன் என்கின்ற பாத்திரங்களில் தோன்றினார். கிளிநொச்சியில் வாழ்ந்து வந்த இவரை மக்கள் நடராஜா பாகவதர் என்று அன்பாக அழைத்து வந்தனர். இவருடைய பிள்ளைகளும் கலைத்துறையில் சாதித்து வருவதும் தனக்குப்பின் கலைத்துறை யில் தனது இரண்டாவது மகனான சிவபாலசுப்பிர மணியம் என்பவரை ஆர்மோனியம் வாசிக்கப்பழக்கியும் நடிப்புத்துறையிலும் உருவாக்கி தனது கலைத்துறைத் தொடர்ச்சியினை விட்டுச்சென்றுள்ளார்.

 

பாரம்பரியக் கலைமுறையில் கைதேர்ந்த இக்கலைஞன் 2009-02-23 ஆம் நாள் முல்லைத்தீவு வலைஞர்மடத்தில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!