குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த இவர் பல ஆன்மீக வழிப்படுத்தல்களை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக திருமுறை ஓதுதல், கடவுளை வழிபடுவது தொடர்பான வழிப்படுத்து தல்கள், பஜனை செய்தல், பக்தர்களின் துன்பதுயரங்களை நீக்குவதற் கான வழிமுறைகளை தனது தெய்வ சக்தியினூடாக அறிந்து நீக்கி வந்தார். சரவணமுத்துச் சுவாமிகளின் அருட்கடாட்சமும் இவருக்குக் கிடைத்தமை இவர் பெற்ற பேறாகும். சரவணமுத்துச்சுவாமிகளுக்குப் பின்னர் அவரால் பூசித்து வழிபடப்பட்ட அம்மனாலயத்தில் சுவாமிகளின் பணியினைத் தொடர்ந்து வந்தார். 1980.05.10 ஆம் நாள் மகாசமாதி அடைந்தார். சரவணமுத்துச் சுவாமிகளின் சமாதி ஆலயத்திற்குப் பின்னால் மாதாஜி அவர்களுக்கும் சமாதி ஆலயம் அமைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.