Sunday, February 9

சபாரத்தினம் , மு

0

1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – திருநெல்வேலி தாழையடி என்ற இடத்தில் பிறந்தவர். தமிழக சஞ்சிகையான கல்கி நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டதன் பயனாக ஈழத்து இலக்கிய வானில் புகுந்து கொண்டவர். ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பில் இவருடைய குருவின் சதி என்ற சிறுகதை இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மறுமலர்ச்சி பத்திரிகையில் வெளிவந்த இவரது தெருக்கீதம், ஆலமரம் ஆகிய இரு கதைகளும் இவருடைய ஆற்றலை புடம்போட்டுக் காட்டுகின்றன. சிந்திக்கத்தொடங்கினான், எனக்கும் உனக்கும், தெரிந்தால் போதும், தாய் போன்ற பல நல்ல சிறுகதைகளை எழுதிய இவர் 1967 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!