1915ஆம் நாள் யாழ்ப்பாணம், கட்டுடை என்னும் இடத்தில் பிறந்து மானிப்பாய், நவாலியில் வாழ்ந்தவர். ஆரம்பக்கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையிலும் உயர் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் கற்றவர். தமிழைப் பாதுகாத்து வளர்ப்பதில் முழுமூச்சாகச் செயலாற்றி வந்த பண்டிதர் இளமுருகனாரான தனது வாழ்க்கைத் துணையின் தமிழ்ப்பணிகளுக்கு உறுதுணை யாக இருந்தவர்.கதிரைமுருகன் கலிப்பா, பறாளை விநாயகர் மும்மணிமாலை முதலிய பாச்செய்யுள் களை எழுதியவர். நாமகள் புகழ்மாலை, கதிரைச் சிலேடை வெண்பா, சிறுவர் செந்தமிழ் ஆகிய தங்கத் தாத்தாவின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதி அணிசேர்த்தவர். இராமாயணத்திலிருந்து கும்பகர்ணன் வதைப்படலம், மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்ச்சிப்படலம் ஆகியவை பாடநூல்களாக இருந்தபொழுது அவற்றிற்கான சிறந்தவுரைகளை எழுதியவர். தனது கணவரின் பூரணன் கதை, கப்பற் பாட்டு, செந்தமிழ்ச் செல்வம் ஆகிய நூல்களுக்கு விரிவான விளக்கவுரை எழுதியவர். அத்தோடு மங்கையர்க்கரசி என்ற நாடகத்தினையும் எழுதினார். ஈழத்துச் சிதம்பர புராணத்திற்கு இவரால் எழுதப்பட்ட உரை ஈழத்துப் பூதந்தேவனாரின் புராண நடைக்கு புத்துயிர் கொடுத்தது போல அமைந்திருந்ததாகவும் அதன் பொருள் விளக்கங்களுக்காகவும் அம்மையாரை பண்டிதைமணி எனப் பட்டமளித்து சான்றோர்களால் கௌரவிக்கப்பட்டவர்
