இணுவில் சிவகாமி அம்மன் கோயிற் சூழலில் வாழ்ந்த இவர் இசைஞானம், இறைபக்தி, ஆன்மீக சிந்தனை, அறப்பணி யாவற்றாலும் சிறந்து விளங்கியவர். தனது குடும்ப நிலைக்கேற்ப மேற்கல்வியை நாடாது விவசாயத்திலும், சுருட்டு வேலையிலும இணைந்தார். திருநெல்வேலி வேதாந்த மடத்திலும் குப்பிளான் மாணிக்கம் அம்மாவின் ஆச்சிரமத்திலும் ஈடுபட்டுப் பல சமய தத்துவங்களையும் கற்றுக்கொண்டார். இவரது இசையறிவு இவரை சிறந்த பண்ணிசையாளராக மாற்றியமைத்தது. இணுவில் சிவகாமி அம்பாளின் தேர் உற்சவத்திற்காக இவர் தாளம் தட்டி , பண்ணிசை பாடி உள்;ரிலும் பிற ஊர்களிலும் சேகரித்த போதிய மரங்கள், சிறுதொகைப் பணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சித்திரத்தேர் பிற அன்பர்களால் நிறைவு செய்யப்பெற்றமை சிவகாமி அம்பாளின் அற்புதமாகும். இறுதிக்காலம் வரை பண்ணிசை பாடி சைவத் தொண்டினை வளர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.