Saturday, October 5

கதிரவேலு, குழந்தைவேலு

0

1918-11-01 ஆம் ஆண்டு புங்குடுதீவு கிராஞ்சியம்பதியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றவேளை பாடசாலையில் கற்பிக்கப்பட்ட உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியாரின் பாட்டிலுள்ள அர்த்த ஆழத்தினை இவர் தனது மனதில் உள்;ர உணர்ந்து கொண்டதனால் திரைகடல் ஓடி திரவியம் தேடலானார். 1932 ஆம் ஆண்டு மலேசியா சென்று கோலாலம்பூரில் தனது சகோதரனுடன் இணைந்து “Ceylon Restauraant” என்னும் உணவு விடுதியை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி பெயரும் பொருளும் ஈட்டினார். 1949 இல் யாழ்ப்பாணம் திரும்பிய இவர் 1950 இல் தனது உறவு முறையான சிவயோகம் என்னும் பெண்மணியைத் திருமணம் செய்தார். இதன்பின்னர் 1951-03-10- ஆம் நாளன்று மலேசிய நாட்டிலும் அங்குள்ள மக்களின் மீதும் அவர் வைத்திருந்த அன்பின் காரணமாக யாழ்ப்பாணத்தில் மலாயாகபே என்றபெயரில் உயர்தர சைவ உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். இதனைக் கட்டுவதற்காக மலேசியாவிலிருந்தே கட்டடப் பொறியியலாளர் களை அழைத்துக் கட்டுவித்தார். சில வருடங்களின் பின்னர் மலாயன் கபே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொழிலாளர்களோடு இணைந்து உழைப்பாளியாக நின்று, தன் கைவண்ணத்தால் மலாயா கபேயை உயர்நிலைக்குக் கொண்டு வந்தார். மலாயா கபேயின் படிகளை யாழ்ப்பாணத்தின் புனித யோகியான யோகர் சுவாமிகளின் திருவடிகள் தீண்டிக்கொண்டேயிருக்கும். சுவாமிகள் பெரியகடைக்கு வரும்போதெல் லாம் மலாயா கபேக்குப் போய் கோப்பியோ, தேநீரோ, சாப்பாடோ அருந்தாமல் செல்லமாட்டார். சுவாமிகளின் புனித பாதமும், புனித மூச்சும், பேச்சும் ஏன் புனிதத்திட்டும் ஆன்மீக அலைகளாய் மலாயா கபேக்குள் வட்டமிட்டதால் கதிரவேலு அவர்களது வாழ்வும் பொது வாழ்வும் பட்டொளி வீசிப் பிரகாசித்தது. சமயம், சமுதாயம், அரசியல் என மூன்று தளங்களில் தன் வாழ்வை நிருணயித்தார். நயினை நாகபூஷனி அம்மன் ஆலயத்தின் அன்னதான அமுதசுரபியை வற்றாது வளம் குன்றாது கவனித்த புரவலர்களில் இவரும் ஒருவர். துன்பப்பட்ட காலங்களில் சிரித்தபடியே வாழ்வியல் மோதல்களைப் போராடி வென்றும் தோற்றும் தலை நிமிர்ந்தவர். தொடர்ந்து இருபத்தைந்து வருடங்கள் முகாமை செய்து தரம் வாய்ந்த நிறுவனமாக உயர்த்தி தனது முதுமையின் இயலாமை காரணமாக மகளின் கணவரான மருமகன் மகேந்திரன் என்பவரிடம் நிருவாகத்தைக் கையளித்து ஒதுங்கிக்கொண்டார். மருமகனது முகாமையில் திரு. சதீஸ்குமார் என்பவர் 1999 இலிருந்து நிருவாகத்தைக் கவனித்து வருவதும் அமரர் கதிரவேலு அவர்கள் காட்டிய நேரிய வழியில் இன்றும் இவர்கள் பாதை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1986-08-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!