Saturday, November 2

பாலசிங்கம், கந்தையா

0

1931-08-05 ஆம் நாள் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிகண்டி என்னுமிடத்தில் பிறந்தவர். தனது ஏழாவது வயதில் பபூன் பாத்திரமேற்று நடிக்க ஆரம்பித்ததுடன் கலைவாழ்வு ஆரம்பமாகியது எனலாம். பின்னர் பார்சி நாடக அரங்கில் ஸ்திரிபார்ட் (பெண்) பாத்திரங்களையேற்று நடித்து வரலானார். மேலும் சமூக நாடகங்கள், சிந்து நடைக்கூத்து,வரலாற்று நாடகங்களிலும் நடித்து கலையுலகில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். இவரால் நடிக்கப்பெற்ற பார்சி நாடகங் களுள் மயானகாண்டம், ஸ்ரீவள்ளி,பூதத்தம்பி, வாலி வதை,கன்னிக்கோட்டை, பதவி மோகம் போன்ற நாடகங்கள் புகழைத் தேடிக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதுடன் பிரகலாதன், சங்கிலியன், சகோதர பாசம்,சத்தியவான்சாவித்திரி, பாஞ்சாலிசபதம், பூதத்தம்பி, கண்ணன்தூது, ராஜாதேசிங்,கோவலன் கண்ணகி, ஆரியமாலா, மதனசேனா, அசோக்குமார், அல்லி அர்ச்சுனா போன்ற பல பார்சி நாடகங்களில் பிரதான பாத்திரங்களையேற்று நடித்துமுள்ளார். இவருடைய கலைச்சேவையினைப் பாராட்டி “கலைவாருதி”, “இசை நாடகமாமணி”, பண்ணிசைச் செல்வர், “முத்தமிழ் வித்தகர்”, “ஆயகலை வித்தகர்”, இயல் இசை நாடகச் செல்வர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூ~ணம் போன்ற விருதுகள் வழங்கப்பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!