1911 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதையினை புதிய கோணத்தில் அமைத்தவர். இவரால் எழுதப்பெற்ற சிறுகதைகளில் பதினேழு கதைகளைத் தொகுத்து கங்காதீபம் என்ற தொகுப்பு நூலாக வெளியிட்டு தனது எழுத்தாக்க திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். மின்னி மின்னி மறைந்த வாழ்க்கை, நெடுவழி, இப்படியல்ல, நான், கடந்து வந்த சிலை, மரணத்தின் நிழல், களனி கங்கைக்கரையிலே, பார்வதி,தியாகம் போன்ற சிறுகதைகள் இவரால் எழுதப்பட்டனவாகும். 1991 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.