1915.05.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் மிருதங்க வித்தவான் என்பதுடன் மிருதங்கம் உட்பட வேறுபல வாத்தியக் கருவிகளையும் திருத்தம் செய்யும் தொழில்நுட்பத் திறனுடையவர். யாழ்ப்பாணம் இரசிகரஞ்சன சபாவின் ஸ்தாபகர்களில் இவரும் ஒருவர். இவரது புதல்வனான விஐயகுமார் என்பவர் தந்தை வழியில் இன்று மிகச்சிறந்த மிருதங்க உற்பத்தியாளராகவும் வித்துவானாகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1984.05.19ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.